Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நஷ்டத்துல இயங்க முடியாது! விற்பனையை நிறுத்திய பானாசோனிக்! - அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

Prasanth K
வெள்ளி, 27 ஜூன் 2025 (10:51 IST)

உலகம் முழுவதும் பிரபலமாக உள்ள ஜப்பானின் பானாசோனிக் நிறுவனம் இந்தியாவில் தனது குறிப்பிட்ட எலெக்ட்ரானிக் பொருட்கள் விற்பனையை இழுத்து மூடியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

ஜப்பானை சேர்ந்த பானாசோனிக் நிறுவனம் டிவி, ப்ரிட்ஜ், வாஷிங் மெஷின் உள்ளிட்ட வீட்டு எலெக்ட்ரானிக் பொருட்கள் தொடங்கி, அதிநவீன சினிமா கேமராக்கள் வரை ஏராளமான பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. இந்தியாவில் ஹரியானாவில் அமைந்துள்ள பானாசோனிக் தொழிற்சாலையில் பல எலெக்ட்ரானிக் பொருட்கள் தயார் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

 

இந்நிலையில் இந்தியாவில் ஃப்ரிட்ஜ் மற்றும் வாஷிங் மெஷின் தயாரிப்பு மற்றும் விற்பனையை நிறுத்துவதாக பானாசோனிக் அறிவித்துள்ளது. இந்திய சந்தையில் பானாசோனிக்கின் இந்த சாதனங்கள் குறைவான வரவேற்பையே பெற்றுள்ள நிலையில் நஷ்டத்தில் இயங்குவதை தவிர்க்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

மேலும் பானாசோனிக் இனி வீடு ஆட்டோமேஷன், ஏசி உள்ளிட்ட பிரிவுகளில் அதிக கவனம் செலுத்த உள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின் தயாரிப்பை நிறுத்தி இருந்தாலும் வாடிக்கையாளர் சேவை, சர்வீஸ் செய்து தருவது போன்ற இதர சேவைகள் தொடர்ந்து நடக்கும் என கூறப்பட்டுள்ளது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

6,000 கோடி ரூபாய், துபாய் முதலீடு என்ன ஆனது? முதல்வருக்கு அண்ணாமலை கேள்வி..!

உத்தரவிட்ட பின்னரும் பரவும் பெண் வழக்கறிஞரின் அந்தரங்க வீடியோ.. உயர்நீதிமன்றம் கேள்வி..!

சென்னை விமான நிலையத்தில் மீண்டும் விபத்து.. கண்ணாடி கதவுகள் உடைந்ததால் பரபரப்பு..!

ஒரே நாளில் உச்சத்திற்கு சென்ற தங்கம் விலை.. ஒரு சவரன் ரூ.76,000ஐ நெருங்கியது..!

வெளிநாட்டு மாணவர்களால் அமெரிக்கா நாசமாகிவிட்டது! இந்தியாவை மறைமுகமாக தாக்கும் அமெரிக்கா?

அடுத்த கட்டுரையில்
Show comments