Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அங்கிளை அங்கிள்னுதானே சொல்ல முடியும்! - விஜய் பேச்சு குறித்து மன்சூர் அலிகான்!

Advertiesment
TVK Vijay speech

Prasanth K

, திங்கள், 25 ஆகஸ்ட் 2025 (14:34 IST)

சமீபத்தில் தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் விஜய் முதல்வர் ஸ்டாலினை ‘அங்கிள்’ என அழைத்தது குறித்து மன்சூர் அலிகான் கருத்து தெரிவித்துள்ளார்.

 

தமிழக வெற்றிக் கழகம் கட்சியை தொடங்கி தமிழக சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கி பயணித்து வருகிறார் விஜய். விக்கிரவாண்டியில் பிரம்மாண்ட மாநாட்டை தொடர்ந்து தற்போது மதுரையில் நடந்த மாநாடு பெரும் வைரலாகியுள்ளது. 14 லட்சம் பேர் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.

 

இந்த மாநாட்டில் தவெக தலைவர் விஜய் பேசியபோது, “ஸ்டாலின் அங்கிள்” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்து ஒருபக்கம் திமுகவினர் விஜய்யை வன்மையாக கண்டித்து வந்த நிலையில், எதிர்கட்சியான பாஜகவின் முன்னாள் தலைவரான அண்ணாமலையும், விஜய் மேடை நாகரிகத்தோடு பேச வேண்டும் என கருத்து தெரிவித்திருந்தார்.

 

இந்நிலையில் மன்சூர் அலிகான் விஜய் பேசியதில் தவறு ஏதும் இல்லை என கருத்து தெரிவித்துள்ளார். சமீபத்தில் ஒரு பேட்டியில் அவர் பேசியபோது, “விஜய் அங்கிள்னு கூப்பிட்டார்னு எல்லாம் கோவப்படுறாங்க. எதற்காக கோவப்படணும். அங்கிளை அங்கிள் என்றுதானே சொல்ல முடியும். விஜய் இத்தனை நாட்களாக சினிமாவில் இருப்பவர். முதல்வர் குடும்பத்தோடும் பழக்கத்தில் உள்ளவர். அவங்க அம்மா, அப்பா எல்லாம் மேடையில் அமர்ந்திருக்கும்போது அப்பா என்று கூப்பிடமுடியுமா? இல்லைன்னா க்ராண்ட்பா என்று சொல்லணுமா?” என்று பேசியுள்ளார்.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அமலாக்கத்துறை சோதனையின்போது தப்பிக்க முயன்ற எம்.எல்.ஏ.. விரட்டி பிடித்த அதிகாரிகள்..!