வரும் ராஜ்யசபா தேர்தலில் அதிமுக வேட்பாளருக்கு பாஜகவின் நான்கு எம்எல்ஏக்கள் ஆதரவு தருவார்கள் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. இதனை அடுத்து, அதிமுக-பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சமீபத்தில் டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தார். இந்த சந்திப்பு கூட்டணிக்கானது அல்ல, தமிழக மக்களின் நலனுக்காக என்று கூறியிருந்தாலும், கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகள் நடந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், 2026 தேர்தலில் திமுகவை தோற்கடிக்க வலிமையான கூட்டணி தேவை என்பது குறித்து அதிமுகவும் பாஜகவும் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக பாஜக தலைவர்களும் ஆலோசனை செய்துள்ளனர்.
வரும் ஜூலை மாதம் நடைபெறும் ராஜ்யசபா தேர்தலின் போது, அதிமுக வேட்பாளருக்கு பாஜகவின் நான்கு எம்எல்ஏக்கள் ஆதரவு தருவார்கள் என்று பாஜக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதன் மூலம், அதிமுக-பாஜக கூட்டணி மீண்டும் உறுதி செய்யப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.