ஜெர்மனி நாட்டின் சர்வதிகாரியான அடால்ஃப் ஹிட்லர் பயன்படுத்திய கடிகாரம் ஏலத்திற்கு வர உள்ளது.
ஜெர்மன் நாட்டில் 1940களில் மிகப்பெரும் சர்வாதிகாரியாக விளங்கியவர் அடால்ஃப் ஹிட்லர். இவர் பயன்படுத்தியதாக கூறப்படும் கைக்கடிகாரத்தை அலெக்சாண்டர் ஹிஸ்டாரிகல் என்ற நிறுவனம் ஏலத்திற்கு விட உள்ளது. கைக்கடிகார தயாரிப்பாளர்களும், ராணுவ வரலாற்று ஆசிரியர்களும் அந்த கடிகாரத்தை ஆராய்ந்து அது ஹிட்லருடையதுதான் என கூறியுள்ளனர்.
அந்த கைக்கடிகாரத்தில் மூன்று தேதிகள் உள்ளன. ஒன்று ஹிட்லருடைய பிறந்தநாள், ஜெர்மனி நாட்டின் அதிபரான நாள் மற்றும் நாசிப்படை தேர்தல் ஹிட்லர் வென்ற நாள் ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த கைக்கடிகாரம் இந்திய மதிப்பில் சுமார் ரூ.31 கோடி வரை ஏலத்தில் விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.