Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஆபாச புகைப்படம் சித்தரித்த முன்னாள் கணவர்: இளம்பெண் திக்குளிக்க முயற்சி!

Advertiesment
Fire
, செவ்வாய், 11 அக்டோபர் 2022 (12:46 IST)
தமது புகைப்படத்தை ஆபாசமாக சித்தரிக்க முன்னாள் கணவர் முயற்சித்ததால் இளம்பெண் ஒருவர் கோவை கலெக்டர் அலுவலகம் முன் தீக்குளிக்க முயற்சி செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
கடந்த 2014ஆம் ஆண்டு இளம் பெண் ஒருவருக்கு திருமணம் நடந்தது. அவர் தனது கணவருக்கு வேறு பெண்களுடன் தொடர்பு இருந்ததை தெரிந்தவுடன் கணவருடன் தகராறு செய்தார். இதனை அடுத்து இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர். இந்த தம்பதிக்கு ஒரு மகன் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
 இந்த நிலையில் விவாகரத்து பெற்ற பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து செல்போன் மூலம் முன்னாள் கணவர் அனுப்பி தொந்தரவு செய்ததாக தெரிகிறது. இதனை அடுத்து மனமுடைந்த இளம்பெண் கோவை கலெக்டர் அலுவலகத்தில் திடீரென தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது
 
அங்கிருந்த போலீசார் உடனடியாக அவரை தீக்குளிப்பதை தடுத்ததால் அவர் உயிருக்கு எந்தவித ஆபத்தும் இல்லை. இந்த நிலையில் இளம்பெண்ணை சமாதானம் செய்த காவல்துறை அதிகாரிகள் முன்னாள் கணவர் குறித்து புகார் அளிக்குமாறு கூறி அனுப்பி வைத்தனர். இதனால் கலெக்டர் அலுவலக வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது
 

Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கலங்கரை விளக்கம் - கிண்டி இடையே 11 கி.மீ மேம்பாலம்: நெடுஞ்சாலைத்துறை திட்டம்!