மதுபோதையில் பாதுகாவலரை தாக்கிய பெண்ணின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
உத்தரபிரதேச மாநிலத்தில் முதல்வர் யோகி ஆதித்நாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது.
இங்குள்ள நொய்டா என்ற பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குயிருப்பில் செக்யூடிட்டிகள் பணிபுரிந்து வருகின்றனர். இந்தக் குடியிருப்புக்குள் அக்கட்டிட ஸ்டிக்கர் இல்லாத ஒரு கார் நுழைய முயன்றுள்ளது.
இதைப் பார்த்த அந்த செக்யூரிட்டி, அந்தக் காரை நிறுத்தி, உள்ளே அனுமதிக்க முடியாது எனக் கூறினார். இதனால் ஆத்திரமடைந்த அந்தக் காருக்குள் இருந்த பெண் வெளியே வந்து, செக்யூரிட்டிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அத்துடன், காரில் இருந்து வந்த மற்ற பெண்களும் அவருடம் சேர்ந்து, செக்யூரிட்டிகளை தாக்கினர்.
இந்தச் சம்பவம் குறித்து செக்யூரிட்டிகள் அளித்த புகாரின்படி தகராறில் ஈடுபட்ட பெண்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது.