Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வெளிநாடு சென்ற மகளுக்கு சென்னை போக தெரியாதா ? – தந்தையின் பிடிவாதத்தால் மகள் பலி !

Advertiesment
வெளிநாடு சென்ற மகளுக்கு சென்னை போக தெரியாதா ? – தந்தையின் பிடிவாதத்தால் மகள் பலி !
, திங்கள், 6 ஜனவரி 2020 (15:35 IST)
தனது தோழியின் வீட்டில் நடந்த மரணத்துக்கு செல்ல தந்தை அனுமதிக்காததால் மகள் விஷம் குடித்து இறந்த சம்பவம் நடந்துள்ளது.

நீலகிரி மாவட்டம் சுந்தர் ராஜ் என்பவரின் மகள் பிரியா. 24 வயதாகும் பிரியா, துபாயில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்துவந்துள்ளார். அப்போது அவருடன் நெருக்கமாகப் பழகிய தோழி ஒருவரின் தந்தை  சென்னையில் இறந்துள்ளார். இந்த சோகமான நேரத்தில் தோழியின் கூட இருந்து அவருக்கு ஆறுதல் சொல்ல நினைத்துள்ளார் பிரியா.

ஆனால் அவரைத் தனியாக சென்னைக்கு அனுப்ப முடியாது என பிரியாவின் தந்தை கண்டிப்பாய் கூறியுள்ளார். இதனால் மனமுடைந்த பிரியா, வீட்டில் வயலுக்கு உபயோகப்படுத்த  வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை எடுத்துக் குடித்துள்ளார். உறவினர்கள் அவரை மருத்துவமனையில் சேர்க்க, சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார். துபாய் வரைப் போய் வேலை பார்த்தவருக்கு சென்னைக்குப் போய் வரத் தெரியாதா என உறவினர்களும் நண்பர்களும் பிரியாவின் தந்தையைக் கடிந்து கொண்டுள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சீனியர் vs ஜூனியர்: தலைவர் பதவிக்கு பாஜகவில் மோதல்?