Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மேலவளவு கொலை வழக்கு: 13 பேருக்கு நோட்டீஸ்

Advertiesment
மேலவளவு கொலை வழக்கு: 13 பேருக்கு நோட்டீஸ்

Arun Prasath

, திங்கள், 25 நவம்பர் 2019 (14:02 IST)
மேலவளவு கொலை வழக்கில் விடுதலையான 13 பேருக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

கடந்த 1997 ஆம் ஆண்டு, பட்டியலினத்தை சேர்ந்த முருகேசன் என்பவர் பஞ்சாயத்துத் தலைவர் போட்டியில் வெற்றி பெற்றதை தொடர்ந்து, முன் விரோதம் காரணமாக முருகேசன் உட்பட 7 பேர் கொலை செய்யப்பட்டனர்.
இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட 17 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.

முன்னதாக இதில் 3 பேர் ஏற்கனவே விடுதலை செய்யப்பட்டனர். மேலும் ஒருவர் உயிரிழந்த நிலையில் சமீபத்தில் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மீதமுள்ள 13 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.

13 பேர் விடுதலையை எதிர்த்து தமிழகம் முழுவதும் பல எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில் 13 பேர் விடுதலைக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் இன்று வழக்கை விசாரித்து மதுரை உயர்நீதிமன்ற கிளை, மேலவளவு கொலை வழக்கில் விடுதலையான 13 பேருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

108 MP பிரைமரி கேமரா... Mi நோட் 10 அறிமுகம் எப்போது?