Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அண்ணாமலை இல்லாமலேயே தொடங்கிய பாஜக ஆலோசனை கூட்டம்: பெரும் பரபரப்பு..!

Advertiesment
அண்ணாமலை இல்லாமலேயே தொடங்கிய பாஜக ஆலோசனை கூட்டம்: பெரும் பரபரப்பு..!
, வியாழன், 5 அக்டோபர் 2023 (11:43 IST)
சென்னையில் அண்ணாமலை இல்லாமல் பாஜக மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இல்லாமலேயே சென்னை, அமைந்தகரையில் உள்ள தனியார் மண்டபத்தில் பாஜக ஆலோசனை கூட்டம் தொடங்கியது. அதிமுக உடன் கூட்டணி முறிந்த நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை செய்வதற்காக இந்த கூட்டம் நடைபெறும் நிலையில் அண்ணாமலை வராததால், கேசவ விநாயகம், எச்.ராஜா ஆகியோர் நீண்ட நேரம் மேடையில் அமர்ந்திருந்தனர்

இந்த நிலையில் அண்ணாமலை வரும் முன்பே வந்தே மாதரம் பாடல் பாடி கூட்டம் தொடங்கப்பட்டது. முதல் முறையாக தமிழகத்தில் அண்ணாமலை இல்லாமல் பெருங்கோட்ட பொறுப்பாளர்கள் கூட்டம் நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது

அண்ணாமலைக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு உள்ளதால் அவரது நடைபயணம் வரும் 16 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக நேற்று  பாஜக அறிவித்து இருந்த நிலையில் இன்று அவர் இல்லாமலேயே பாஜக ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.

Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திடீரென 500 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ்.. முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி..!