Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நடிகை குஷ்புவுக்கு கோவிலில் சிறப்பு கவுரவம்

Advertiesment
kushbhu
, புதன், 4 அக்டோபர் 2023 (14:18 IST)
நடிகை குஷ்புவுக்கு திருச்சூரில் உள்ள விஷ்ணு மாயா கோவிலில் சிறப்பு கவுரவம் அளிக்கப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் 90 களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் குஷ்பு. இவர்,  சின்னத்தம்பி, சிங்காரவேலன்,  அண்ணாமலை,   நாட்டாமை,வில்லு,ஆகிய படங்களில் நடித்துள்ளார்.சின்னத்திரையிலும் பல நிகழ்ச்சிகள் நடத்தியதுடன், சீரியலும் தடம் பதித்து சாதித்தார். அதன்பின்னர், அரசிலில்  திமுகவில் இருந்து விலகி, காங்கிரஸ் நீண்ட காலம் செயல்பட்டு வந்த நிலையில், பாஜகவில் இணைந்தார்.
 
தற்போது சினிமாவில் நடித்து வருவதுடன்,  பாஜகவில் தேசிய செயற்குழு உறுப்பினராக செயல்பட்டு வருகிறார் குஷ்பு.

இந்த நிலையில் நடிகை குஷ்புவுக்கு திருச்சூரில் உள்ள விஷ்ணு மாயா கோவிலில் சிறப்பு கவுரவம் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஒரு பெண்ணை தேர்வு செய்து சிறப்பு பூஜை செய்வது வழக்கம்… அந்த வககையில் நடிகை குஷ்புவை கோயில் நிர்வாகம் தேர்வு செய்து    சமீபத்தில் நாரி பூஜைக்கு அழைப்பு விடுத்திருந்தது.

இதுகுறித்து நடிகை குஷ்பு, ‘’குறிப்பிட்ட நபர்கள் மட்டுமே இங்கு அழைக்கப்படுவார்கள்,. அதனால் தெய்வமே என்னை தேர்ந்தெடுத்ததாக நான் நம்புகிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முட்டிக்கொண்ட இயக்குனரும் ஆர் ஜே பாலாஜியும்… சிங்கப்பூர் சலூன் ரிலீஸ் ஆகுமா?