Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வெற்றி பெறுவாரா விஜய பிரபாகரன்..? கருத்துக்கணிப்பில் வெளியான அதிர்ச்சி தகவல்..!!

Vijyabaprabakaran

Senthil Velan

, சனி, 1 ஜூன் 2024 (22:23 IST)
விருதுநகர் தொகுதியில் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் இரண்டாம் இடத்தை பிடிப்பார் என்று தந்தி டிவியின் கருத்துக்கணிப்பின் முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெற்றது. இன்று இறுதி கட்ட தேர்தல் நடந்து முடிந்த நிலையில் தேர்தலுக்கு பிந்தைய பல்வேறு கருத்து கணிப்பு முடிவுகள் வெளியாகி வருகின்றன. 
 
அதன்படி தந்தி டிவி நடத்திய தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பின் முடிவுகள் தொகுதி வாரியாக வெளியிடப்பட்டு வருகிறது.  அந்த வகையில் விருதுநகர் தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக மாணிக்கம் தாகூா் 36 சதவீதம் பெற்று வெற்றி பெறுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைவராலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மறைந்த கேப்டன் விஜயகாந்தின் மூத்த மகன்  விஜய பிரபாகரன் 32 சதவீதம் பெற்று இரண்டாம் இடத்தை பிடிப்பார் என கூறப்பட்டுள்ளது.  பாஜக சார்பாக நடிகை ராதிகா சரத்குமாருக்கு  21 சதவீதமும் ஓட்டுகள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அதிமுக ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாது..! இரட்டை இலக்கில் பாஜக..! ஷாக் எக்சிட் போல் முடிவு..!!