முன்கூட்டியே கருத்துக்கணிப்பு வெளியிட்ட தொலைக்காட்சி மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் ஏப்ரல் 19 முதல் ஜூன் ஒன்று வரை ஏழு கட்டமாக தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் ஏப்ரல் 19 முதல் ஜூன் 1ஆம் தேதி மாலை 6.30 மணி வரை கருத்துக்கணிப்புகள் வெளியிட தடை என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது
இந்த நிலையில் ஒடிசாவை சேர்ந்த தனியார் தொலைக்காட்சி முன்கூட்டியே தேர்தல் கணிப்புகளை வெளியிட்டு உள்ளதை அடுத்து அந்த தொலைக்காட்சி நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாநில தேர்தல் ஆணையருக்கு இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது
இதனை அடுத்து அந்த தொலைக்காட்சி மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜூன் ஒன்றாம் தேதி மாலை 6 மணியுடன் வாக்குப்பதிவு முடிவடைவதை அடுத்து 6:30 மணிக்கு மேல் தான் அனைத்து தொலைக்காட்சிகளும் தேர்தல் கருத்துக்கணிப்பை வெளியிட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.