Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

Exit Poll 2024 Live.. தமிழகத்தில் எக்சிட் போல் முடிவுகள்..!

Exit Poll 2024 Live.. தமிழகத்தில் எக்சிட் போல் முடிவுகள்..!

Mahendran

, சனி, 1 ஜூன் 2024 (18:27 IST)
தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெற்ற நிலையில் இந்த தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி மற்றும் பாஜக கூட்டணி ஆகிய மூன்று கூட்டணிகளும் சீமானின் நாம் தமிழர் கட்சி தனித்தும் போட்டியிட்டன.
 
திமுக கூட்டணியில் காங்கிரஸ், முஸ்லிம் லீக், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி , மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் ஆகிய கட்சிகள் கூட்டணியில் இருந்தன.
 
இதில் திமுக 21 தொகுதிகளிலும் காங்கிரஸ் ஒன்பது தொகுதிகளிலும் விடுதலை சிறுத்தைகள் மற்றும் இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள் தலா இரண்டு தொகுதிகளிலும் மற்ற கட்சிகள் தலா ஒரு தொகுதிகளிலும் போட்டியிட்டன
 
அதேபோல் அதிமுக கூட்டணியில் எஸ் டி பி ஐ கட்சி, புதிய தமிழகம் மற்றும் தேமுதிக ஆகிய கட்சிகள் போட்டியிட்டன. அதிமுக 32 தொகுதிகளிலும், தேமுதிக ஐந்து தொகுதிகளிலும் மற்ற இரண்டு கட்சிகள் தலா ஒரு தொகுதிகளும் போட்டியிட்டன.
 
அதேபோல் பாரதிய ஜனதா கட்சி கூட்டணியில் இந்திய ஜனநாயக கட்சி, புதிய நீதி கட்சி, தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம், பாட்டாளி மக்கள் கட்சி, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், தமிழ் மாநில காங்கிரஸ் மற்றும் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு ஆகிய கட்சிகள் போட்டியிட்டன.


 
இதில் பாரதிய ஜனதா கட்சி 19 தொகுதிகளிலும், பாட்டாளி மக்கள் கட்சி 10 தொகுதிகளிலும் போட்டியிட்டன. தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் இரண்டு தொகுதிகளிலும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி மூன்று தொகுதிகளிலும் போட்டியிட்டது.
 
இந்த நிலையில் நாம் தமிழர் கட்சி தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது
 
 
எக்சிட் போல் முடிவுகள்:

அனைத்து கட்ட வாக்குப்பதிவும் முடிவந்த நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பின்படி தமிழ்நாட்டில் எந்த கட்சிக்கு எவ்வளவு இடங்கள் கிடைக்கும் என்பது பற்றி தற்போது பார்க்கலாம்.
 
 
அதன்படி தமிழ்நாட்டில் திமுக கூட்டணி 26 முதல் 30 தொகுதிகள் வரை பிடிக்க வாய்ப்புள்ளது.
 
இந்த முறை தமிழகத்தை குறிவைத்து பாஜக தீவிரமான தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தது. பலமுறை பிரதமர் மோடி, அமித்ஷா என பலரும் வந்து பிரச்சாரம் செய்தனர். எனினும் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் 1 முதல் 3 தொகுதிகள் வரை பிடிக்க வாய்ப்புள்ளது என கணிக்கப்பட்டுள்ளது.
 
அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் 1 முதல் 6 தொகுதிகள் வரை பிடிக்க வாய்ப்புள்ளது.

சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு எந்த தொகுதியிலும் வெற்றி வாய்ப்பு இல்லை என்றாலும் கணிசமான வாக்கு சதவீதத்தைப் பெறும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

நீலகிரியில் திமுக வேட்பாளர் ஆ.ராசா 36% வாக்குகள் பெற வாய்ப்பு. அதிமுக 31%, பாஜக 24% வாக்குகள் பெற வாய்ப்பு

திருநெல்வேலியில் காங்கிரஸ் 35%, பாஜக 34%. அதிமுக 21% வாக்குகள் பெற வாய்ப்பு

பொள்ளாச்சியில் திமுக 37%, அதிமுக 34% பாஜக 22% வாக்குகள் பெற வாய்ப்புள்ளதாக தந்தி டிவி கணிப்பு

ராமநாதபுரத்தில் ஐயூஎம்எல் 35%, ஓ.பன்னீர்செல்வம் 33%, அதிமுக 22% வாக்குகள் பெற வாய்ப்புள்ளதாக தந்தி டிவி கருத்துக்கணிப்பு

தமிழ்நாட்டில் காங்கிரஸ் 7-8 தொகுதிகளிலும், திமுக 17-21 தொகுதிகளிலும், பாஜக 2-4 இடங்களிலும் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக தினமலர் கணிப்பு
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திமுக கழக அமைப்புச் செயலாளர் ஆர்எஸ்.பாரதி, வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, டிகேஎஸ்.இளங்கோவன் ஆகியோர் காணொலி வாயிலாக திமுக முகவர்களுக்கு ஆலோசனை!