ஆப்கானிஸ்தானில் நிலநடுக்க பாதிப்பில் சிக்கியவர்களை மீட்பதில் தொய்வு - என்ன காரணம்?ஆப்கானிஸ்தானில் நிலநடுக்க பாதிப்பில் சிக்கியவர்களை மீட்பதில் தொய்வு - என்ன காரணம்?
ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் நடவடிக்கையை கனமழை மற்றும் போதிய மனித ஆற்றல் இல்லாதது மேலும் சிக்கலாக்கி வருகிறது.
இந்த இணைப்புகளைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள
ஆப்கன் நிலநடுக்கம்: மீட்பு நடவடிக்கைகளை சிக்கலாக்கும் கன மழை, மோசமான வசதிகள்
ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் நடவடிக்கையை கனமழை மற்றும் போதிய மனித ஆற்றல் இல்லாதது மேலும் சிக்கலாக்கி வருகிறது.
கடினமான நிலப்பரப்பு காரணமாக அங்கு நிவாரணம் மற்றும் மீட்புப் பணி களத்தில் உள்ள மீட்புதவி ஊழியர்களுக்கு சிரமமாக உள்ளது.
ஆப்கானிஸ்தானின் சுகாதார அமைப்பு ஏற்கெனவே மோசமாக உள்ளது. அது தற்போதைய பேரழிவு பிரச்னைகளை மேலும் தீவிரமாக்கியுள்ளது. நிலநடுக்கத்தால் நாட்டின் பல பகுதிகளில் தகவல் தொடர்பு அமைப்பு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இக்கட்டான சூழ்நிலையில், தாலிபன் நிர்வாகம் சர்வதேச உதவி நிறுவனங்களிடம் உதவி கோரியுள்ளது. மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள பட்டிகா மாகாணத்தின் தொலைதூர பகுதிகளில் உள்ள மக்களுக்கு தங்குமிடம் மற்றும் உணவு வழங்கும் பணிகளை தன்னார்வ அமைப்புகளும் ஐக்கிய நாடுகள் சபையும் மேற்கொண்டுள்ளன.