தமிழகத்தில் ஆறு நாட்களுக்கு தேவையான நிலக்கரி கையிருப்பு உள்ளது என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நிலக்கரி கையிருப்பு குறைவாக இருந்ததாகவும் அதனால் மின்வெட்டு ஏற்பட வாய்ப்பிருப்பதாகவும் கூறப்பட்டது. ஆனால் தமிழக அரசு இந்த கருத்தை மறுத்து வந்தது.
இந்த நிலையில் தமிழகத்தில் 6 நாட்களுக்கு நிலக்கரி கையிருப்பு உள்ளது என்றும் மழை காரணமாக கடந்த 2 நாட்களாக மின் நுகர்வு குறைந்துள்ளது என்றும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்
மேலும் அடுத்த 5 ஆண்டுகளில் தமிழகத்தின் மின் உற்பத்தி 50 சதவீதத்தை எட்டும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்