இந்தியா முழுவதும் பள்ளிகளில் டிஜிட்டல் முறையில் கட்டணம் வசூலிக்கும் முறையை கொண்டு வர மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை முறையை நாடு முழுவதும் மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது. இந்தியாவில் பல அரசு, தனியார் பள்ளிகள் செயல்பட்டு வரும் நிலையில் அவற்றில் பயிலும் மாணவர்களுக்கான கல்வி கட்டணம் நேரடியாக பணமாகவே வசூல் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், பள்ளிகளில் கல்வி கட்டணத்தை டிஜிட்டல் முறையில் வசூலிக்க ஊக்குவிக்க மாநில அரசுகளை மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்த செயல்பாடு மூலம் மாணவர்களிடம் எவ்வளவு கட்டணம் பள்ளிகள் வசூலிக்கின்றன என்பது குறித்த வெளிப்படைத்தன்மை கிடைக்கும் எனவும், மேலும், பெற்றோர்கள் பள்ளிகளுக்கு அலைய வேண்டியது இல்லாமல் வீட்டில் இருந்தபடியே கல்வி கட்டணங்களை செலுத்தவும், டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கவும் உதவும் என்றும் கூறப்பட்டுள்ளது.
Edit by Prasanth.K