தமிழக சட்டமன்றத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கு ஆதரவாக எடப்பாடி பழனிசாமி பேசியது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுகவில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கும், பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே மனஸ்தாபம் ஏற்பட்டிருந்ததாக கூறப்பட்டது. அதற்கேற்றாற் போல சமீபமாக அதிமுக நிகழ்ச்சிகளை தவிர்த்து வந்த செங்கோட்டையன், சட்டமன்ற கூட்டத்திற்கு முன்னதாக நடந்த அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்திலும் கலந்துகொள்ளவில்லை.
இதனால் அதிமுகவுடனான அவரது மோதல் தீவிடமடைந்துள்ளதாக கருதப்பட்ட நிலையில் அதிமுகவின் பிற முக்கியஸ்தர்கள் செங்கோட்டையனை சந்தித்து பேசி வந்தனர். நேற்று சபாநாயகருக்கு எதிரான தீர்மானத்தில் செங்கோட்டையன் அதிமுகவினோரோடு சேர்ந்தே வாக்களித்தார்.
இந்நிலையில் இன்று பட்ஜெட் மீதான விவாதத்தின் போது எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி “முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் என்ற வகையில் செங்கோட்டையன் பேசுவதற்கு வாய்ப்பு கொடுங்கள்” என முறையிட்டார். இதனால் இருவருக்குமிடையே இருந்த மனஸ்தாபம் நீங்கி விட்டதாக தெரிகிறது.
முன்னதாக தனியே வந்து சென்ற செங்கோட்டையன் இன்று அதிமுகவுடன் பிற எம்.எல்.ஏக்களுடன் இணைந்தே பேரவை உணவகத்தில் உணவருந்தி இருக்கிறார் செங்கோட்டையன்,
Edit by Prasanth.K