Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கனிமொழியை எதிர்த்து மு.க.அழகிரி போட்டியா? பாஜகவின் மெகா பிளான்!

Advertiesment
கனிமொழியை எதிர்த்து மு.க.அழகிரி போட்டியா? பாஜகவின் மெகா பிளான்!
, வியாழன், 14 மார்ச் 2019 (20:56 IST)
கடந்த ஒரு வருடமாகவே திமுக எம்பி கனிமொழி தூத்துகுடிக்கு அடிக்கடி சென்று வந்ததில் இருந்தே அவர் அந்த தொகுதியில் போட்டியிடப்போவதாக அரசல்புரசலாக கூறப்பட்டது. இந்த நிலையில் இந்த வதந்தி தற்போது கிட்டத்தட்ட உண்மையாகியுள்ளது நாளை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேட்பாளர்களை அறிவிக்கும்போது இந்த செய்தி 100% உண்மையாகிவிடும்
 
இந்த நிலையில் கனிமொழியை எதிர்த்து பாஜக வேட்பாளராக தமிழிசை நிறுத்தப்படலாம் என்ற செய்தி வெளியானது. ஆனால் தோற்கும் தொகுதியில் போட்டியிட தமிழிசை விரும்பவில்லையாம். இந்த நிலையில் அமித்ஷாவின் மெகா பிளான் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி தூத்துகுடியில் அதிமுக-பாஜக கூட்டணியின் பொது வேட்பாளராக மு.க.அழகிரியை நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாம். இதற்காக பாஜக மேலிடம் அழகிரியை சந்திக்க தூது அனுப்பியதாகவும், அழகிரியும் கனிமொழியை எதிர்க்க கிட்டத்தட்ட ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.
 
webdunia
கருணாநிதி மறைவுக்கு பின் கனிமொழி முழுக்க முழுக்க ஸ்டாலின் ஆதரவாளராக மாறிவிட்டதில் அழகிரிக்கு ரொம்பவே அதிருப்தியாம். தன்னை மீண்டும் திமுகவில் இணைக்காத ஸ்டாலினுக்கும், தன்னை கண்டுகொள்ளாத தங்கை கனிமொழிக்கு பாடம் கற்பிக்கவும் தூத்துகுடியில் அழகிரி போட்டியிடக்கூடும் என கூறப்படுகிறது. இருப்பினும் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவரும் வரை பொறுமை காப்போம்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரயில் நிலையத்தில் இடிந்து விழுந்த பயணிகள் நடைபாதை: பலர் காயம் என தகவல்