Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பொள்ளாச்சி வழக்கு – தாமாக முன்வந்து விசாரிக்க நீதிமன்றம் மறுப்பு !

பொள்ளாச்சி வழக்கு – தாமாக முன்வந்து விசாரிக்க நீதிமன்றம் மறுப்பு !
, வியாழன், 14 மார்ச் 2019 (12:34 IST)
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை தொடர்பாக, தானாக முன்வந்து வழக்கை விசாரிக்க உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது.

பொள்ளாச்சியில் கடந்த 7 ஆண்டுகளாக நடந்ததாகக் கூறப்படும் பாலியல் அத்துமீறல்கள் தொடர்பான விவகாரம் தமிழகம் முழுவதும் கொந்தளிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இது சம்மந்தமாக போலிஸ் வசந்தகுமார், செந்தில், சதீஷ், பார் நாகராஜன் ஆகியோரைக் கைது செய்ததாகவும், அதில் பார் நாகராஜன் என்பவர்  பொள்ளாச்சி 34 வார்டு அம்மா பேரவைச் செயலாளராக இருப்பதால் அவரை மட்டும் போலிஸார் விடுவித்து விட்டதாகக் கூறப்படுகிறது. இந்த வழக்கில் சம்மந்தப்பட்ட திருநாவுக்கரசு என்ற மற்றொருக் குற்றவாளியும் மார்ச் 5ஆம் தேதியன்று கைது செய்யப்பட்டார்.

அதிமுக பிரமுகர் இதில் சம்மந்தப்பட்டிருப்பதால் அதில் ஆளும் கட்சியைச் சேர்ந்த இன்னும் சிலருக்கும் தொடர்பிருக்கலாம் என்றும் சம்மந்தப்பட்டவர்களை அதிமுக அரசு காப்பாற்ற நினைக்கிறது என்றும் திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டினார். மேலும் சமூக வலைதளங்களிலும் இது தொடர்பான குரல்கள் வலுவாக எழ ஆரம்பித்தன. ஆனால் அதிமுக அரசு இந்தக் குற்றச்சாட்டை தொடர்ந்து மறுத்து வருகிறது.

ஆளும் கட்சி நபர்கள் சம்மந்தப்பட்டு இருப்பதால் போலிஸ் விசாரணை முறையாக நடக்காமல் போக வாய்ப்பிருப்பதாகக் கூறி இந்த வழக்கை நீதிமன்றமே தானாக முன்வந்து இந்த வழக்கை விசாரிக்க வேண்டுமென்று கோரிக்கைகள் எழுந்துள்ளன.  இந்த வழக்கு தொடர்பான சிபிசிஐடி போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையை நேற்று சிபிசிஐடி போலீஸார் தொடங்கினர்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் பெண் வழக்கறிஞர்கள் சிலர், தலைமை நீதிபதி தஹில் ரமானி, நீதிபதி துரைசாமி அமர்வின் முன்பு, சென்னை உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து பொள்ளாச்சி வழக்கை விசாரணைக்கு எடுக்க வேண்டும், உயர் நீதிமன்ற நீதிபதி மேற்பார்வையில் சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும், என முறையிட்டனர். ஆனால் நீதிபதிகள் இந்த கோரிக்கையை நிராகரித்தனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பொள்ளாச்சி ஜெயராமன் மகன்களை விசாரிப்போம்... மகளிர் ஆணையம்!!!