வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். அத்துடன் திமுக, அதிமுக, பாஜக, தேமுதிக போன்ற கட்சிகளின் தலைமை வேட்ளார்களிடம் நேர்காணல் நடத்தி வருகின்றன. வரும் ஏப்ரம் 18 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தலின் பொழுதே தமிழகத்தில் காலியாக உள்ள 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
இந்நிலையில் திமுக அதிமுக ஆகிய கட்சிகள் இடைத்தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்து விட்டன. நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதாக கமல்ஹாசன் அறிவித்திருந்தார். அதற்கான வேட்பாளர்கள் தேர்வு நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் வரும் இடைதேர்தலில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் போட்டியிடும் என்று அறிவித்துள்ளார். இன்று முதல் வரும் 16 ஆம் தேதி வரை விருப்ப மனுக்கல் பெறலாம் என்று மற்றும் விருப்ப மனுவை பொள்ளாச்சி தலைமை அலுவலகங்களில் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மக்கள் நீதி மய்யம் சார்பில் கோவையில் நடைபெறவுள்ள பிரச்சாரத்தில் வேட்பாளர்களை அறிமுகப்படுத்துவார் என்று தெரிகிறது.