கள்ளக்காதலியுடன் உல்லாசமாக இருந்த வீடியோ.. கணவனே மனைவிக்கு அனுப்பியதால் விபரீதம்..!

Siva
திங்கள், 15 செப்டம்பர் 2025 (21:46 IST)
திருப்பூரை சேர்ந்த கீர்த்தி மீனா என்ற பெண், தனது கணவர் சிவக்குமாரின் கள்ளக்காதல் விவகாரம் காரணமாக தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
ஈரோட்டை சேர்ந்த கீர்த்தி மீனா, நான்கு ஆண்டுகளுக்கு முன்பு திருப்பூரை சேர்ந்த சிவக்குமாரை காதலித்துத் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு இரண்டு வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. சமீப காலமாக சிவக்குமார் வேறொரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்துள்ளார். இது குறித்து கீர்த்தி மீனா அவரிடம் கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது.
 
இந்நிலையில், சிவக்குமார் தனது கள்ளக்காதலியுடன் நெருக்கமாக இருக்கும் வீடியோ ஒன்றை கீர்த்தி மீனாவின் செல்போனுக்கு அனுப்பியுள்ளார். அந்த வீடியோவை பார்த்து அதிர்ச்சியடைந்த கீர்த்தி மீனா, தனது குழந்தையை தூங்க வைத்துவிட்டு, வீட்டில் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
 
இச்சம்பவம் குறித்து வீரபாண்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, சிவக்குமாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆண்கள் பற்றாக்குறை எதிரொலி.. ஒரு மணி நேரத்திற்கு ஆண்களை வாடகைக்கு எடுக்கும் பெண்கள்..!

இண்டிகோ விமானம் ரத்து எதிரொலி: காணொளி காட்சி மூலம் ரிஷப்சனில் கலந்து கொண்ட மணமக்கள்..!

தனியார்களை நம்பி, அதுவும் 2 நிறுவனங்களை மட்டும் நம்பினால் இப்படித்தான்.. இண்டிகோ விவகாரம் குறித்து எச்சரிக்கை..!

தமிழகத்தில் 7 நாட்களுக்கு மழை தொடரும்: இன்று கனமழைகு வாய்ப்பு எங்கே?

திருப்பரங்குன்றம் விவகாரம்: திமுக எம்.பி.க்களின் கோரிக்கை மாநிலங்களவையின் நிராகரிப்பு..

அடுத்த கட்டுரையில்
Show comments