Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொலுசை அடமானம் வைத்துக் குடித்த கணவர் – பெட்ரோல் ஊற்றி எரித்த மனைவி !

Webdunia
வியாழன், 12 டிசம்பர் 2019 (14:38 IST)
தனது கொலுசை அடமானம் வைத்து குடித்த கணவரை மனைவி பெட்ரோல் ஊற்றி கொளுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் அருகே கண்டமங்கலம் மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர்கள் செந்தில் மற்றும் சித்ரா தம்பதிகள். இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர். கொத்தனராக இருந்து வரும் செந்தில் ஒழுங்காக வேலைக்கு செல்லாமல் குடிப்பழக்கத்துக்கு அடிமையாகியுள்ளார். இதனால் குடும்பத்தில் அடிக்கடி சண்டைகள் எழுந்துள்ளன.

இந்நிலையில் நேற்று முன் தினம் சித்ராவின் கால் கொலுசை கொண்டு சென்று அடமானம் வைத்துக் குடித்துள்ளார் செந்தில். இது சம்மந்தமாக இருவருக்கும் இடையே சண்டை எழ, வீட்டுக்கு வெளியே நின்ற பைக்கில் இருந்து பெட்ரோல் எடுத்து செந்தில் மேல் ஊற்றி கொளுத்தியுள்ளார் சித்ரா. இதில் அவர் உடலில் தீப்பரவ பின்னர் தீயை அணைத்து 108 மூலம் புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்துள்ளார். அங்கு செந்திலுக்கு சிகிச்சை நடக்க போலீஸார் சித்ராவைக் கைது செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று ஒரே நாளில் 2வது முறை அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை: பொதுமக்கள் அதிர்ச்சி..!

திடீரென தமிழகம் வருகிறார் அமைச்சர் அமித்ஷா.. ஈபிஎஸ், ஓபிஎஸ் உடன் சந்திப்பா?

இனி ஆதார் அட்டை தேவையில்லை.. முகம் ஒன்றே போதும்: மத்திய அரசின் அசத்தல் அறிவிப்பு..!

ஜிப்லி புகைப்படம் எடுத்தால் சைபர் குற்றமா? காவல்துறை எச்சரிக்கை..!

2 வருடங்கள் தலைமறைவாக இருந்த செந்தில் பாலாஜி சகோதரருக்கு உடனே ஜாமின்.. நீதிபதி உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments