Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உள்ளாட்சித் தேர்தல்… ஏலம் விடப்பட்ட தலைவர் பதவி – கொலையில் முடிந்த விபரீதம் !

Webdunia
வியாழன், 12 டிசம்பர் 2019 (14:16 IST)
விருதுநகர் மாவட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கான சீட் ஏலம் விடப்பட்டதை எதிர்த்துக் கேள்விகேட்ட இளைஞர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர்  அருகே உள்ள கோட்டைப்பட்டி கிராமத்தில் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக நேற்று நடந்த கூட்டத்தில் அதிமுக பிரமுகரை போட்டியின்றி தேர்வு செய்வதாக முடிவெடுத்துள்ளனர். இதை அதேப் பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார் என்ற இளைஞர் தட்டிக் கேட்டுள்ளார்.

அப்போது வாக்குவாதம் முற்ற சதீஷ்குமாரை ஒரு சிலர் தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயம் அடைந்த சதீஷ்குமார், சிவகாசி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே இறந்துவிட்டார். இதனால் அந்த பகுதியில் பரபரப்பான சூழல் உருவானது. வழக்குப் பதிவு செய்த ஏழாயிரம் பண்ணை காவல்துறையினர், அதிமுகவைச் சேர்ந் ராமசுப்பு மற்றும் சுப்புராஜ், முத்துராஜ், செல்வராஜ் ஆகிய 4 பேர் கைது செய்துள்ளனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பொய் பாலியல் புகாரால் நடுரோட்டுக்கு வந்த ஆசிரியர்! 7 ஆண்டுகள் கழித்து மன்னிப்பு கேட்ட மாணவி!

கூடுதல் மருத்துவ படிப்பு இடங்களுக்கு தமிழக அரசு விண்ணப்பிக்கவில்லையா? அதிகாரிகள் விளக்கம்..!

சென்னை விமான நிலைய வளாகத்திற்குள் நகர பேருந்து.. அதிரடி அறிவிப்பு..!

அமித்ஷா இல்ல எந்த ஷா வந்தாலும் நடக்காது! 2026ல் ஒரு கை பார்க்கலாம்! - மு.க.ஸ்டாலின் சவால்!

ஜெகன்மோகன் ரெட்டியின் சொத்துக்கள் முடக்கம்.. அமலாக்கத்துறை நடவடிக்கையால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments