Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பிகினி உடையில் பெட்ரோல் பங்க் முன் குவிந்த வாடிக்கையாளர்கள்: பெரும் பரபரப்பு

Advertiesment
பிகினி உடையில் பெட்ரோல் பங்க் முன் குவிந்த வாடிக்கையாளர்கள்: பெரும் பரபரப்பு
, திங்கள், 18 நவம்பர் 2019 (21:30 IST)
ரஷ்யாவில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க்கில் பிகினி உடையில் ஆண்களும் பெண்களும் கையில் கேனுடன் பெட்ரோல் வாங்க பெட்ரோல் பங்க் முன் குவிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது 
 
ரஷ்யாவில் உள்ள சயிரா என்ற பகுதியில் புதியதாக ஒரு பெட்ரோல் பங்க் சமீபத்தில் திறக்கப்பட்டது. திறப்பு விழா சலுகையாக முதல் 3 மணி நேரம் பிகினி உடையில் வரும் நபர்களுக்கு பெட்ரோல் இலவசமாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
 
இதனையடுத்து அந்தப் பகுதியில் உள்ள ஆண்களும் பெண்களும் பிகினி உடையில் அந்த பெட்ரோல் பங்கு முன் ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கானோர் குவிந்தனர். இதனால் பெட்ரோல் பங்கில் உள்ள ஊழியர்கள் திணறிப் போனார்கள்
 
3 மணி நேரம் மட்டுமே இந்த சலுகை என்று அறிவிக்கப்பட்டிருந்ததால் அதற்குள் ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் பிகினி உடையில் வந்து பெட்ரோல் வாங்கி சென்றனர்
 
இது குறித்த வீடியோ ரஷ்யாவில் உள்ள சமூக வலைத்தளத்தில் வைரலாகி மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களையும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட லைக்ஸ்களையும் பெற்றுள்ளது.
 
ரஷ்யாவில் புதிதாக ஒரு பெட்ரோல் பங்க் ஆரம்பித்தால் அந்த பெட்ரோல் பங்க் மக்கள் மத்தியில்  பிரபலமடைய பல மாதங்கள் ஆகும். ஆனால் வித்தியாசமான சலுகை அறிவிப்பின் மூலம் அந்த பெட்ரோல் பங்க் ஒரே நாளில் நாடு முழுவதும் பிரபலமாகி விட்டது என்பது குறிப்பிடத்தக்கது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்றைய முக்கிய நிகழ்வுகளை TOP TEN செய்திகளாகக் காணலாம்...