Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

எதிர் வீட்டில் பையன், வெளிநாட்டில் கணவன்: கள்ளக்காதல் விபரீதம்

Advertiesment
எதிர் வீட்டில் பையன், வெளிநாட்டில் கணவன்: கள்ளக்காதல் விபரீதம்
, வெள்ளி, 30 நவம்பர் 2018 (19:52 IST)
விழுப்புரம் அருகே கள்ளக்காதலுக்கு தடையாக இருந்த கணவனை பெட்ரோல் ஊற்றி கொன்ற மனைவியை போலீஸார் அதிரடியாக கைது செய்துள்ளனர். 
 
விழுப்புரம் மாவட்டம் பக்கிரிப்பாளையத்தை சேர்ந்தவர் ஜாகிர் உசேன். இவர் சபீனா பானுவை 2005 ஆம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு குழந்தையில்லை. அதோடு ஜாகிர் உசேன் வெளிநாட்டில் பணிபுரிபவர். 
 
இதனால், எதிர் வீட்டில் வசித்து வந்த டிரைவர் யுவராஜூடன் கள்ளத்தொடர்பில் இருந்துள்ளார் சபீனா பானு. இந்த விவகாரம் ஊர் மக்களுக்கு தெரிந்து, சபீனா பானுவின் கணவர் வெளிநாட்டில் இருந்து வந்த போது இதை பெற்றி கூறியுள்ளனர்.
 
இதனால், மனைவியை கண்டித்துள்ளார் ஜாகீர். இருப்பினும் கள்ளக்காதலை விடுவதற்கு சபீனா தயாராக இல்லை. இதனால் கணவம் மனைவிக்கு இடையே அடிக்கடி வாக்குவாதம் நடைபெற்று வந்தது. 
 
ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த சபீனா கணவன் மீது பெட்ரோல் ஊற்றி கொளுத்தினார். ஜாகீரின் அலறல் சத்தம் கேட்டு உதவ வந்த அக்கம் பக்கத்தினர் போலீஸாருக்கும் தகவல் கொடுத்தனர். 
 
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஜாகீரின் வாக்குமூலத்தை ஆதாரமகா வைத்து சபீனாவையும் அவரளது கள்ளக்காதலனையும் போலீஸார் கைது செய்துள்ளனர். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விபச்சார தொழிலுக்கு உதவிய ஏட்டு : அதிரவைக்கும் தகவல்