Publish Date: Wed, 28 Nov 2018 (18:40 IST)
Updated Date: Wed, 28 Nov 2018 (18:45 IST)
ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு உத்தரவிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து வேதாந்தா நிர்வாகம் பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கில் பசுமை தீர்ப்பாயம் இன்று முக்கிய அறிக்கையை வெளியிட்டது. அதில், ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்ட தமிழக அரசின் முடிவை நியாயப்படுத்த முடியாது என்றும், ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு உத்தரவிட்டது இயற்கைக்கு முரணானது என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை செயல்பட அனுமதி தரலாம் என்றும் பசுமை தீர்ப்பாயத்தில் தருண் அகர்வால் தலைமையிலான குழு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் தமிழக அரசுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக கருதப்படுகிறது.
இந்நிலையில் இது குறித்து பாமக தலைவர் ராமதாஸ் டிவிட்டர் பதிவை வெளியிட்டுள்ளார். அதில், ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதை ஏற்கமுடியாது என வல்லுனர் குழு அறிக்கை தாக்கல் ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டதுதான்.
நான் முன்பே கூறியது தான். புத்தாண்டில் ஆலை திறக்கப்படுவது உறுதி. உலக நீதிமன்றத்துக்கே சென்றாலும் ஆலையை திறக்க முடியாது என்று கூறிய ஆட்சியாளர்கள் மக்களை ஏமாற்றிவிட்டனர் என்று பதிவிட்டுள்ளார்.