ரஜினிகாந்த், அக்ஷய குமார், எமி ஜாக்சன் ஆகியோர் நடித்து ஷங்கர் இயக்கத்தில் நேற்று வெளியான 2.0 படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. சினிமா பிரபலங்களும் படத்தை பாராட்டினர்.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட படம் ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளது. அடுத்து பேட்ட படம் பொங்களுக்கு வெளியாக உள்ளதாக படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு அடுத்து ரஜினி - முருகதாஸ் கூட்டணியின் ஒரு படம் உருவாக உள்ளதாகவும் செய்திகள் வெளியாகி வருகிறது.
இந்நிலையில் ரஜினி சினிமாவில் அதிகம் ஆர்வம் செலுத்தி வருவதால் அரசியலுக்கு வருவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனென்றால், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஆன்மீக அரசியல் அறிவிப்பை வெளியிட்டதோடு ரஜினியின் அரசியல் பயணம் அப்படியே கிடப்பில் கிடக்கிறது.
ஆனால், இதற்கு முன்னர் ஒரு பேட்டியில் சினிமாவிலும், அரசியலிலும் எனது பயணம் இருக்காது. ரஜினி மக்கள் மன்றம் என்பது வருங்கால கட்சிக்கான ஒரு அடித்தளம் என கூறியிருந்தார்.
சினிமாவில் இருந்தால் அரசியலில் இருக்க மாட்டேன் என அவர் குறிப்பிட்டுள்ளதால், அடுத்த ஆண்டும் அரசியல் களத்தில் தள்ளி நின்றுகொண்டே சென்றுவிடுவாரோ என சந்தேகம் எழுந்துள்ளது.