தமிழகத்தில் ஜூலை 8ஆம் தேதி வரை மழை: மீனவர்களுக்கு எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்..!

Mahendran
புதன், 2 ஜூலை 2025 (15:14 IST)
தமிழகத்தில் ஜூலை 8 ஆம் தேதி வரை பரவலாக மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று முதல் நாளை வரை தமிழகத்தின் சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.
 
ஜூலை 5 ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பரவலாக மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
சென்னையை பொறுத்தவரை, வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் சில பகுதிகளில் இன்று இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், அதிகபட்ச வெப்பநிலை 36 முதல் 37 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
இன்றும், நாளையும் தெற்கு கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதை ஒட்டிய குமரி கடற்கரை பகுதிகளில் மணிக்கு 55 கிலோமீட்டர் வரை காற்று வீசக்கூடும் என்பதால், இந்தப் பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செங்கோட்டையன் பின்னால் இருப்பது திமுக?!... கொளுத்திப்போட்ட நயினார் நாகேந்திரன்!...

அதிமுகவை ஒன்றிணைக்க சொன்னதே பாஜகதான்!.. போட்டு உடைத்த செங்கோட்டையன்!...

நீதிமன்ற அவமதிப்பு மனு.. பதிலளிக்கத் தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

மகாராஷ்டிரா பெண் வழக்கறிஞர் பீகார் தேர்தலில் வாக்களித்தாரா? வைரல் பதிவு..!

மாதம் ரூ.4 லட்சம் ஜீவனாம்சம் போதாது.. கிரிக்கெட் வீரர் ஷமியின் மனைவி மனுதாக்கல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments