தமிழக அரசின் தொல்லியல் துறையில் மாத உதவித் தொகையுடன் முதுநிலைப் பட்டயப் படிப்புகள் பயில்வதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு தொல்லியல் மற்றும் அருங்காட்சியகவியல் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, தொல்லியல், கல்வெட்டியல், மரபு மேலாண்மை மற்றும் அருங்காட்சியகவியல், சுவடியியல் ஆகிய பாடப்பிரிவுகளில் முதுநிலைப் பட்டயப் படிப்புக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இவற்றில் தொல்லியல் பிரிவுக்கு ஏதானும் ஒரு பாடப்பிரிவில் முதுநிலைப்பட்டமும், சுவடியியல் பிரிவுக்கு முதுகலை தமிழ் பாடத்தில் பட்டமும் பெற்றிருக்க வேண்டும். கல்வெட்டியல் பிரிவுக்கு வரலாறு தொடர்பான பாடங்களில் முதுநிலைப்பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் நபர்களுக்கு ஜூலை 20 அன்று சென்னை, விழுப்புரம், சேலம், திருச்சி மற்றும் மதுரை ஆகிய நகரங்களில் தேர்வுகள் நடத்தப்படும் என கூறப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்படும் நபர்கள் மாதம் ரூ.8 ஆயிரம் உதவித் தொகையுடன் 2 ஆண்டுகள் முதுநிலைப் பட்டயப் படிப்பை பெறுவார்கள். மேலும் விவரங்களுக்கு www.tnarch.gov.in என்ற இணையதளத்தை காணவும்.
Edit by Prasanth.K