மழைக்காலம் தொடங்க இருக்கும் நிலையில் வெளியே செல்லும் பலரும் மழையில் நனையும் வாய்ப்புள்ளது. ஈரமான கைகளால் ஸ்மார்ட்போனை பயன்படுத்துவது கடினம் மட்டுமல்ல, ஆபத்தானதும் கூட. உங்கள் மொபைல் போனை மழைக்காலத்தில் பாதுகாப்பாகவும், தடையின்றியும் பயன்படுத்த உதவும் சில ஸ்மார்ட் குறிப்புகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.
1. நீர் புகாத உறை அல்லது ஜிப்லாக்: திடீர் மழை அல்லது நீர் தெறிப்பிலிருந்து உங்கள் போனை பாதுகாக்க, தரமான நீர் புகாத மொபைல் உறை அல்லது சில ஜிப்லாக் பைகளை உடன் எடுத்துச் செல்வது மிக அவசியம்.
2. ஈரமான கைகளுடன் சார்ஜ் செய்ய வேண்டாம்: தண்ணீர் மற்றும் மின்சாரம் இரண்டும் ஆபத்தான கலவை. உங்கள் கைகள் அல்லது சார்ஜிங் போர்ட் ஈரமாக இருக்கும்போது ஒருபோதும் ஸ்மார்ட்போனை சார்ஜரில் செருக வேண்டாம். இது சில சமயங்களில் மின்சார ஷாக் ஏற்பட்டு உயிருக்கே ஆபத்தாக முடியலாம்.
3. போன் ஈரமாகிவிட்டால் உடனடியாக அணைக்கவும்: உங்கள் போன் ஈரமாகிவிட்டால், உடனடியாக அதை அணைத்துவிடுங்கள். ஹேர் ட்ரையர் வைத்து உலர்த்த முயற்சிக்காதீர்கள். அதற்கு பதிலாக, ஒரு உலர்ந்த துணியால் துடைத்து, 24-48 மணி நேரம் பச்சரிசி அல்லது சிலிகா ஜெல் பாக்கெட்டுகளுக்குள் வைக்கவும்.
4. சார்ஜிங் போர்ட்டை தொடர்ந்து சுத்தம் செய்யவும்: போன் மழைக்காலத்தில் மட்டுமல்ல, மற்ற காலங்களிலும் தூசு மற்றும் ஈரப்பதத்தை சேகரிக்கும். இது USB-C அல்லது லைட்னிங் போர்ட்டை அடைக்கலாம். சில நாட்களுக்கு ஒருமுறை மென்மையான தூரிகை அல்லது ப்ளோவர் பயன்படுத்தி போர்ட்டை மெதுவாகச் சுத்தம் செய்யவும்.
5. மழையில் பேச வேண்டாம்: நீர் புகாத போன்களில் கூட மழைநீர் இயர்பீஸ் அல்லது மைக்ரோஃபோனுக்குள் நுழைந்தால் பழுதடையலாம். பாதுகாப்பாக அழைப்புகளை எடுக்க வயர்டு இயர்போன்கள் அல்லது புளூடூத் இயர்பட்களை பயன்படுத்துங்கள்.
மேற்கண்ட குறிப்புகளைப் பின்பற்றுவதன் மூலம், மழைக்காலத்திலும் உங்கள் ஸ்மார்ட்போன் பாதுகாப்பாகவும், சீராகவும் செயல்படும்.