Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நாங்குநேரி, விக்ரவாண்டி இடைத்தேர்தல்: திமுக தோல்விக்கு காரணம் என்ன?

Advertiesment
நாங்குநேரி
, வியாழன், 24 அக்டோபர் 2019 (21:51 IST)
நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய 2 தொகுதிகளும் திமுக மற்றும் காங்கிரஸ் கைவசமிருந்த தொகுதிகள் ஆகும். எனவே இந்த இரண்டு தொகுதிகளிலும் திமுக, காங்கிரஸ் மிக எளிதில் வெற்றி பெறும் என்று தேர்தலுக்கு முன்பாக கணிக்கப்பட்டது 
 
இந்த நிலையில் அனைவரும் ஆச்சரியப்படும் வகையில் இந்த இடைத்தேர்தலில் இரண்டு தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். நாங்குநேரி தொகுதியை பொருத்தவரை அதிமுகவின் வெற்றிக்கு மிகப் பெரிய அளவில் பாமக மற்றும் தேமுதிக உதவியுள்ளது.
 
இந்த தொகுதியில் வன்னியர் சமுதாய மக்கள் அதிகம் இருப்பதால் பாமக தலைவர்கள் தேர்தல் பிரச்சாரம் கைகொடுத்துள்ளது. அதேபோல் கடைசி நேரத்தில் விஜயகாந்த் தேர்தல் களத்தில் களமிறங்கி பிரச்சாரம் செய்ததும் அக்கட்சியின் தொண்டர்களுக்கு புத்துணர்ச்சி அளித்தது என்பதால் அவர்களது வாக்குகள் அதிமுக வேட்பாளருக்கு மொத்தமாக கிடைத்துள்ளது என்பது தெரியவருகிறது 
 
மேலும் இந்த தொகுதியில் பிரச்சாரம் செய்த திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள், வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கப்படும் என்று வாக்குறுதி கொடுத்ததை மற்ற சமுதாய மக்கள் அதிருப்தி அடைந்தனர் என்பது திமுகவின் தோல்விக்கு ஒரு காரணமாக கருதப்படுகிறது. அதுமட்டுமின்றி இந்த தொகுதியில் திமுக வேட்பாளர் புகழேந்தி தொகுதிக்கு சம்பந்தமில்லாதவர் என்பதும் ஒரு காரணமாக கருதப்படுகிறது 
 
இதேபோல் நாங்குநேரி தொகுதியில் 14 கிராம மக்கள் வாக்களிக்காமல் தேர்தலைப் புறக்கணித்தது அதிமுகவுக்கு சாதகமாக இருப்பதாக கூறப்படுகிறது. இவர்கள் அனைவரும் காலம் காலமாக காங்கிரஸ் வேட்பாளருக்கு வாக்களித்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் தொகுதிக்கு சம்பந்தம் இல்லாதவர்கள் என்ற காரணமும் காங்கிரஸ் வேட்பாளரின் தோல்விக்கு காரணமாக கூறப்படுகிறது 
 
மேலும் இந்த தொகுதி எம்எல்ஏவாக இருந்த எச்.வசந்தகுமார் தொகுதிக்கு எந்த நன்மையும் செய்யவில்லை என்பதும், அவர் மீது அந்த பகுதி மக்கள் அதிருப்தியில் இருந்தனர் என்பதும் காங்கிரஸ் தோல்விக்கு ஒரு காரணமாக கருதப்படுகிறது.
 
மொத்தத்தில் விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி ஆகிய 2 தொகுதிகளில் தோல்விக்கு பல காரணங்கள் இருந்தாலும் தனிப்பட்ட வகைகள் முக ஸ்டாலின் தலைமைக்கு ஒரு சோதனையாகவே கருதப்படுகிறது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தீபாவளியை சிறையில் கழிக்கும் ப சிதம்பரம்