பிக்பாஸ் வீட்டில் வாட்டர்மெலன் ஸ்டார் திவாகரின் வார்த்தை பயன்பாடு எல்லை மீறி சென்ற நிலையில் இன்று சபரிக்கும், திவாகருக்குமே மோதல் வெடித்துள்ளது.
இந்த வாரம் தொடங்கியதிலிருந்தே வாட்டர்மெலன் திவாகர் கேமரா முன்னால் நடிக்கச் சென்றால் அதற்கு இடையூறு தரும் விதமாக கானா வினோத்தும், கம்ருதீனும் ஏதாவது செய்து வருகின்றனர். ஆனால் அதற்காக கோபப்படும் திவாகர் தான் நடிப்பு திறமையை மக்களிடம் காட்டுவதற்காகவே பிக்பாஸ் வந்துள்ளதாக பேசி வருகிறார்.
வந்த நாள் முதல் இன்று வரை தன்னுடைய நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளாத அவர், மற்றவர்கள் விமர்சித்தால் அவர்களை தகுதியற்றவர்கள் என முத்திரை குத்துவதையும் செய்து வருகிறார். நேற்று வாட்டர்மெலன் சட்டையை கழற்றி விட்டு நின்றது குறித்து கனி கேட்க வர, அதற்கு திவாகர் எஃப்ஜேவை சம்பந்தப்படுத்தி பேசியதில் பெரும் வாக்குவாதம் உண்டானது.
இந்நிலையில் இன்று வீட்டில் தின்பது, தூங்குவது என இருப்பது யார் என ஹவுஸ்மேட்ஸிடம் பிக்பாஸ் கேட்க, அதற்கு ரம்யா ஜோ, வாட்டர்மெலனை சொன்னார். அதனால் வாட்டர்மெலன் திவாகர் சூடாகி விட்டார். கோபத்தில் ரம்யாவை பார்த்து தராதரம் இல்லாதவர் என சொல்ல, அதை கேட்ட சபரிக்கு கோபம் வந்து திவாகரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். என் தங்கச்சிய தராதர இல்லாதவன்னு சொன்னா நான் வேடிக்கை பாக்கணுமா? என சபரி கோபமாக பேசியுள்ளார்.
தனக்கு ஆதரவாக நின்ற எஃப்ஜே, சபரியிடம் அடுத்தடுத்து மோதிய வாட்டர்மெலன் மீண்டும் விஜே பாருவுடனே நட்பை பலப்படுத்துவார் என தெரிகிறது. இவர்களது காம்போ பிக்பாஸ் வீட்டையே ரணகளமாக்கி சண்டை சச்சரவுக்குள்ளேயே வைத்துக் கொண்டிருப்பதாக புலம்புகின்றனர் ஆடியன்ஸ்.
Edit by Prasanth.K