மீண்டும் சரிந்த தங்கம் விலை! மக்கள் மகிழ்ச்சி! - இன்றைய விலை நிலவரம்!

Prasanth K
வியாழன், 30 அக்டோபர் 2025 (09:56 IST)

கடந்த சில நாட்களாக சரிந்து வந்த தங்கம் நேற்று சற்று விலை உயர்ந்தாலும் இன்று மீண்டும் கடும் சரிவை சந்தித்துள்ளது.

 

உலகளாவிய பொருளாதார காரணிகள், தங்கம் மீதான முதலீடு அதிகரிப்பு போன்றவற்றால் கடந்த சில மாதங்களில் தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்து சவரன் ரூ.96 ஆயிரத்தைத் தொட்டது. இனி தங்கமே வாங்க முடியாதா என்ற அளவு மக்களுக்கு கவலையை கொடுத்து பின்னர் வேகவேகமாக விலை குறைந்து வருகிறது.

 

நேற்று முன் தினம் 22 காரட் ஆபரண தங்கம் சவரன் ரூ.88,600க்கு விற்பனையான நிலையில், நேற்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2 ஆயிரம் உயர்ந்து ரூ.90,600க்கு விற்பனையானது. இதனால் தங்கம் இனி விலை உயரத் தொடங்குமா என கேள்வி எழுந்த நிலையில், இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,800 விலை குறைந்து சவரன் ரூ.88,800 ஆக விற்பனையாகி வருகிறது.

 

ஆபரண தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.225 குறைந்து ரூ11,100 ஆக விற்பனையாகி வருகிறது. 24 காரட் தங்கம் கிராம் ரூ.12,109க்கும், சவரன் ரூ.96,872க்கும் விற்பனையாகி வருகிறது. 

 

வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 குறைந்து ரூ.165 க்கு விற்பனையாகி வருகிறது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஏற்ற இறக்கத்தில் பங்குச்சந்தை.. இன்று மீண்டும் சரிவு.. முதலீட்டாளர்கள் அதிர்ச்சி..!

நவம்பர், டிசம்பரில் வலுவான புயல்கள் உருவாக வாய்ப்பு! - சுயாதீன வானிலை ஆய்வாலர் டெல்டா வெதர்மேன் கணிப்பு!

15 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்.. நீதிமன்ற விசாரணை நடந்து கொண்டிருந்தபோதே குழந்தை பெற்றதால் அதிர்ச்சி..!

எவ்வளவு விழிப்புணர்வு ஏற்படுத்தியும் பயனில்லை.. டிஜிட்டல் அரேஸ்ட்டில் ரூ.50 லட்சம் ஏமாந்த முதிய தம்பதி..!

சூடானில் உள்நாட்டு போர் தீவிரம்.. ராணுவமே சொந்த நாட்டு மக்கள் 460 பேரை கொன்ற கொடூரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments