Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Wednesday, 26 March 2025
webdunia

தமிழ்நாடு பாஜக வேட்பாளர்கள் யார்? அண்ணாமலை நாளை டெல்லி பயணம்!

Advertiesment
annamalai

Sinoj

, செவ்வாய், 5 மார்ச் 2024 (22:52 IST)
விரைவில் நாடாளுமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில், பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட  தேசிய கட்சிகளும், திமுக, திரிணாமுல், ஆம் ஆத்மி, சமாஜ்வாடி உள்ளிட்ட  மாநில கட்சிகளும் கூட்டணி பற்றியும் தொகுதி பங்கீடு பற்றி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
 
கடந்த சனிக்கிழமை, பாஜக சார்பில் மக்களவை தேர்தலில் போட்டியிடும்  முதற்கட்ட  வேட்பாளர் பட்டியல் வெளியான  நிலையில் சென்னையில் நேற்று நடந்த பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசியிருந்தார். இதில், ஆளுங்கட்சியான திமுகவை கடுமையாக விமர்சித்திருந்தார்.
 
இந்த நிலையில், தமிழ்நாட்டில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் எப்போது வெளியாகும்,யாருடன் கூட்டணி என்ற கேள்வி எழுந்தது.
 
இந்த நிலையில். தமிழ் நாட்டில் போட்டியிடும் பாஜக  வேட்பாளர்கள் பட்டியலை இறுதி செய்ய  நாளை மத்திய அமைச்சர் எல்.முருகன், மாநில தலைவர் அண்ணாமலை, உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் டெல்லி செல்கின்றனர்.
 
 தேசிய தலைமையில் விரைவில் வெளியிடப்படும் 2 ஆம் கட்ட வேட்பாளர்காள் பட்டியலில் தமிழ் நாட்டின் வேட்பாளர்கள் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது,
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் முடங்கியது.. பயனர்கள் அவதி!