Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கடைசி துளி போதைப்பொருள் ஒழிகின்ற வரை கழகத்தின் குரல் - எடப்பாடி பழனிசாமி

கடைசி துளி போதைப்பொருள் ஒழிகின்ற வரை கழகத்தின் குரல் - எடப்பாடி பழனிசாமி

Sinoj

, செவ்வாய், 5 மார்ச் 2024 (20:48 IST)
தமிழ்நாட்டில் குவிந்து கிடக்கும் போதைப்பொருட்களை முழுவதுமாக பறிமுதல் செய்து, தமிழ்நாட்டின் கடல் எல்லைகளை போதைப்பொருள் புழங்காவண்ணம் பாதுகாக்குமாறு தேசிய போதைப்பொருள் பிரிவு  அதிகாரிகளைக் கேட்டுக்கொள்கிறேன் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளதாவது:

''இந்த விடியா திமுக ஆட்சியில் தொடர்ந்து போதைப் பொருள் பறிமுதல்களும் போதைப் பொருள் மாபியா செயல்பாடுகளும் மக்களைப் பெரும் அச்சத்திற்கு ஆளாக்கியுள்ள நிலையில், இன்று  இராமேஸ்வரம் கடல் பகுதியில் மேலும் 108 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் என்ற செய்தி, தமிழ்நாட்டை இந்த விடியா திமுக அரசு சுடுகாடாக மாற்றி வருகிறதோ என்ற பயத்தை ஏற்படுத்துகிறது.
 
தமிழ்நாட்டை போதைப் பொருள் மொத்தவிற்பனைக் கிடங்காக இந்த விடியா அரசு மாற்றியுள்ளதாக நான் ஏற்கனவே கூறிய நிலையில், தற்போது போதைப் பொருள் தயாரிப்பு மையமாகவே தமிழ்நாடு மாறிவிட்டதோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது.
 
நிர்வாகத் திறனென்றால் என்னவென்றே தெரியாத விடியா அரசின் பொம்மை முதல்வர், போதைப் பொருள் புழக்கத்தை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்காமல், போதைப்பொருள் மாபியா தலைவன் ஜாபர் சாதிக் எந்தவித பயமும் இன்றி தமிழ்நாட்டில் சர்வசாதாரணமாக செயல்படுவதற்கு திமுகவில் கட்சி அங்கீகாரமும் அளித்திருப்பது வெட்கக்கேடானது!
 
விடியா அரசின் மெத்தனத்தாலும், ஊக்குவிப்பிலும் தமிழ்நாட்டில் குவிந்து கிடக்கும் போதைப்பொருட்களை முழுவதுமாக பறிமுதல் செய்து, தமிழ்நாட்டின் கடல் எல்லைகளை போதைப்பொருள் புழங்காவண்ணம் பாதுகாக்குமாறு தேசிய போதைப்பொருள் பிரிவு 
அதிகாரிகளைக் கேட்டுக்கொள்கிறேன்.
 
கடைசி துளி போதைப்பொருள் ஒழிகின்ற வரை கழகத்தின் குரல் போதைப்பொருட்கள் மற்றும் இதனை புழக்கும் மாபியாவுக்கு எதிராக ஒலித்துக்கொண்டே இருக்கும்!'' என்று தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அதிக பர்கர்கள் சாப்பிட்டு முதியவர் கின்னஸ் சாதனை !