Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தாமரையை பாஜகவுக்கு சின்னமாக ஒதுக்கீடு செய்ததை எதிர்த்த வழக்கு- தீர்ப்பு ஒத்திவைப்பு

Advertiesment
highcourt

Sinoj

, செவ்வாய், 5 மார்ச் 2024 (16:58 IST)
தேசிய மலரான தாமரையை பாஜகவுக்கு சின்னமாக ஒதுக்கீடு செய்ததை எதிர்த்த வழக்கின் தீர்ப்பை தள்ளிவைத்து இன்று  சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
மத்தியில் பிரதமர் மோடி  தலைமையிலான பாஜக  ஆட்சி நடந்து வருகிறது. இக்கட்சியின் தேசிய தலைவராக ஜேபி. நட்டாவும், தமிழகக தலைவராக அண்ணாமலையும் உள்ளனர்.
 
இந்த நிலையில், தேசிய மலரான தாமரையை ஓர் அரசியல் கட்சிக்கு ஒதுக்கியது  நாட்டின் ஒருமைப்பாட்டை இழிவுபடுத்துவது என டி.ரமேஷ் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.
 
மேலும் பாஜகவுக்கு தாமரை சின்னம் ஒதுக்கீடு செய்ததை ரத்து செய்யக்கோரி இந்திய தேர்தல் ஆணையத்தில் கோரிக்கை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
 
விரைவில் பாராளுமன்ற தேர்தல் நடக்கவுள்ள நிலையில் பாஜகவுக்கு சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டது குறித்து தொடரப்பட்ட வழக்கு பாஜகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
இந்த நிலையில், இவ்வழக்கின் தீர்ப்பை  தேதி குறிப்பிடாமல் சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இப்படி ஒரு ஊழல் "ஒழிப்பு" சாதனை வரலாற்றை வைத்திருக்கும் மோடி அவர்கள்- அமைச்சர் மனோதங்கராஜ்