சென்னையில் கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக எந்தெந்த பகுதியில் மழை நீர் தேங்கியுள்ளது என்றும், கனமழையால் எந்தெந்த சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ளது என்ற தகவலை சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. இதன் விவரங்கள் பின்வருமாறு
கெங்கு ரெட்டி சுரங்கப் பாதையில் மழை நீர் தேங்கியுள்ளதால் மூடப்பட்டுள்ளது.
ரங்கராஜபுரம் சுரங்கப் பாதை மூடப்பட்டுள்ளது.
பழவந்தாங்கல் சுரங்கப்பாதை மூடப்பட்டுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.
பெரம்பூர் சுரங்கப்பாதை மூடப்பட்டுள்ளது.
ஆர்பிஐ சுரங்கப்பாதை, திருவொற்றியூர் அஜாக்ஸ் சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ளது.
ஹாரிங்டன் மற்றும் லயோலா கல்லூரி சுரங்கப் பாதைகளில் மழை நீர் தேங்கவில்லை.
துரைசாமி சுரங்கப் பாதையில் மழை நீர் தேங்கவில்லை.
அரங்கநாதன் சுரங்கப்பாதை, சைதாப்பேட்டை மார்க்கெட், மீனப்பாக்கம் பகுதிகளில் உள்ள சுரங்கப்பாதைகளில் தண்ணீர் தேக்கமில்லை.
மேலும், ஸ்டான்லி, சிபி சாலை சுரங்கப்பாதைகளில் தண்ணீர் தேங்கவில்லை
சுந்தரம் பாயிண்ட், வில்லிவாக்கம் பகுதிகளில் சுரங்கப் பாதைகளில் தண்ணீர் தேங்கவில்லை.
இவ்வாறு சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.