Publish Date: Sat, 30 Nov 2024 (12:28 IST)
Updated Date: Sat, 30 Nov 2024 (12:30 IST)
நேற்று சென்னையில் தங்கம் விலை ஒரு கிராமுக்கு 70 ரூபாய் அதிகரித்த நிலையில் இன்று பத்து ரூபாய் குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. இந்த நிலையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரத்தை பார்ப்போம்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து ரூபாய் 7,150 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 80 குறைந்து ரூபாய் 57,200 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 7,800 எனவும் ஒரு சவரன் ரூபாய் 62,400 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூபாய் 100.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 100,000.00 எனவும் விற்பனையாகி வருகிறது