தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நேற்று இதுவரை இல்லாத அளவுக்கு 3500க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது., கொரோனா தொற்றிலிருந்து மக்களைப் பாதுக்காக்க அரசு தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
இந்நிலையில், தமிழகத்தில் எப்போது பள்ளிகள் திறக்கப்படும் என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பதில் அளித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளதாவது :
தமிழகத்தில் தற்போதைய சூழலில் பள்ளிகள் திறப்பது சாத்தியமில்லை. இதுகுறித்து முதல்வர் மற்றும் அமைசர்களுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் எனவும், ஆன்லைன் வகுப்புகளைப் பொறுத்தவரை 2 நாட்களுக்கு முதலமைச்சருடன் பேசி முடிவு எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.