Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Monday, 31 March 2025
webdunia

ஸ்டாலினால் இன்று நாம் ஒரு எம்.எல்.ஏவை இழந்துவிட்டோம்! – எடப்பாடியார் குற்றச்சாட்டு

Advertiesment
Tamilnadu
, வியாழன், 25 ஜூன் 2020 (15:50 IST)
தமிழக அரசின் அறிவுறுத்தல்களை மு.க.ஸ்டாலின் கவனம் கொள்ளாமல் தனது கட்சியினரை தவறாக வழிநடத்தியுள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் தமிழக அரசின் அலட்சியமும், மிதமான செயல்பாடுகளுமே கொரோனா பரவ காரணம் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார். அவரது கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக அமைச்சர்கள் சிலரும் அவ்வபோது பதிலளித்து வருகின்றனர்.

இந்நிலையில் மு.க.ஸ்டாலினின் குற்றச்சாட்டுகள் குறித்து பேசியுள்ளத தமிழக  முதல்வர் எடப்பாடி பழனிசாமி “முக ஸ்டாலின் ஊரடங்கில் வீட்டில் இருக்க மாட்டாமல் தவறான தகவல்களை தொடர்ந்து மக்களிடம் பரப்பி வருகிறார். மற்ற மாநிலங்களில் உள்ள எதிர்கட்சிகள் யாரும் ஸ்டாலினை போல செயல்படவில்லை. அரசியல்ரீதியாக அதிகாரத்தை கைப்பற்றவும், அரசியலில் தான் இருப்பதை காட்டிக் கொள்ளவும் தொடர்ந்து ஏதாவது அறிக்கைகளை விடுத்து வருகிறார்” என்று கூறியுள்ளார்.

மேலும் “மக்களுக்கு தேவையான பொருட்களை திமுக விநியோகிக்க விரும்பினால் அரசு அதிகாரிகளிடம் வழங்கி அதை செய்திருக்கலாம். மு.க.ஸ்டாலின் தவறான வழிகாட்டுதல்களால் தமிழக அரசு ஒரு எம்.எல்.ஏவை இழந்துள்ளது” என்றும் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கொரோனா வைரஸுக்கு பின்பு பருவநிலை மாற்றம்: தலைக்கு மேல் தொங்கும் பருவநிலை அபாயம்