Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கமல்ஹாசனின் காந்தி டுவீட்டுக்கு என்ன அர்த்தம் தெரியுமா?

Advertiesment
கமல்ஹாசனின் காந்தி டுவீட்டுக்கு என்ன அர்த்தம் தெரியுமா?
, வெள்ளி, 4 அக்டோபர் 2019 (05:20 IST)
கமல்ஹாசன் பேசுவதும் சரி, டுவீட்டுக்கள் பதிவு செய்வதும் சரி பலருக்கு புரியாது. தனது தமிழ்ப்புலமையை நிரூபிக்கும் வகையில் அவர் பல நேரங்களில் தூய தமிழில் பேசிவருவது தெரிந்ததே. அந்த வகையில் இன்று அவர் பதிவு செய்திருக்கும் டுவீட், பலருக்கு புரியவில்லை என்பதால் இதோ தமிழுக்கு ஒரு தமிழ் மொழிபெயர்ப்பு

கமல்ஹாசனின் டுவீட்:

எம் காந்தியின் திருநீற்றை  களவுற்ற 
பக்தர்காள்
உம் நெத்தியில் பூசிடவைத்த  அச்சாம்பலை 
ஏற்றதில் மகிழ்கிறோம். இன்னமும் உளது நீர்
சுட்டதின் பிணக்குவியல்  கூடிடக்கூடிட
உம்பக்தியின் அடிநாதம் காந்தியின் சாம்பலுடன்  கைலாயமெய்தவே 
கணக்கிலா இந்தியர்கள் வழிகோலுகின்றோம் வாழ்த்துடன்கூடியே

இந்த டுவீட்டுக்கு அர்த்தம் இதுதான்: காந்தியின் அஸ்தியை திருடி சென்றவர்களே!, அந்த அஸ்தியை நீங்கள் உங்கள் நெற்றியில் பூசி திருந்தினால் நாங்கள் மகிழ்ச்சி அடைவோம். ஆனால் நீங்கள் காந்தியை போல் இன்னும் பலரையும் கொலை செய்வதால் ஏற்படும் பிணக்குவியல் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே போகிறது. உங்களது போலி பக்தியின் அஸ்திவாரம் மரணித்த், காந்தியின் அஸ்தி என்னும் சாம்பலுடன் மேலுலகம் செல்லுங்கள் என கணக்கில் அடங்காத இந்தியர்கள் விரும்புகிறோம். அதற்கான வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறோம் என்பதுதான் கமல்ஹாசனின் டுவீட்டுக்கு அர்த்தம்,

மொத்தத்தில் ’காந்தியின் சாம்பலை திருடியதை கண்டிக்கிறேன்’ என்பதுதான் இந்த கவிதையின் ஒருவரி பொருள் ஆகும்.

முன்னதாக மத்திய பிரதேசத்தில் காந்தியின் அஸ்தியை திருடிய மர்ம நபர்கள், அவரது சிலையையும் சேதப்படுத்தி அவர் சிலையில் ‘தேசத்துரோகி’ என எழுதி வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிரதமர் தமிழை உயர்த்தி பேசுவதற்கு ஒரு காரணம் இருக்கிறது: கமல்ஹாசன்