Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இது அனிதாக்களுக்கான காலம் அல்ல! நிர்மலா சீதாராமன்கள் காலம்

இது அனிதாக்களுக்கான காலம் அல்ல!  நிர்மலா  சீதாராமன்கள் காலம்
, செவ்வாய், 5 செப்டம்பர் 2017 (13:02 IST)
நிச்சயம் இது அனிதாக்களுக்கான காலம் அல்ல! இது நிர்மலா  சீதாராமன்கள் காலம் என்பதை வரலாறு மிக அருமையாக பதிவு செய்து வருகிறது. இது தமிழகத்திற்கு இன்னும் ஒரு சமூக மலர்ச்சிக்கான காலம்! ஆயிரம் சீதா ராமன்கள், லட்சம் ஹெச். ராஜாக்களும், கோடி எஸ்.வி சேகர்கள் வந்தாலும், எங்கள் மண்! எங்கள் சமூக நீதி! எங்கள் பாரம்பரியம்! எங்கள் உரிமை! என்றும் மாறாத ஓன்று. 


 
 
யார் இந்த சீதா ராமன்?  உங்க வீட்டுல சாப்பிடுறதுக்கு நாங்க வரி போடல? என்றார். கடலை மிட்டாய்க்கு வரி ஏன் என சிறப்பாக விளக்கிய நிர்மலா அனிதாவின் மரணத்திற்கு பதில் சொல்வாரா? இவரின் தமிழக விசுவாசம்!  காவேரியில் தமிழகத்துக்கு தண்ணீர் தர வேண்டாம் என்று கர்நாடககாரர்களுடன் சென்று மனு கொடுத்த போதே தெளிவாக தெரிந்தது. மாநில அரசு ஒரு சட்டம் பாஸ் செய்து, இந்த வருஷம் மட்டும் நீட் தேர்வு விலக்கு கேட்டால் மத்திய அரசு உதவ தயார் என்று சொன்ன சீதா ராமன் அனிதாவின் மரணத்திற்கு பதில் சொல்வாரா? 
 
காற்றில் கரைந்த ஒரு கந்தக மலருக்கு பதில் சொல்வாரா? ஒரு சொல் வெல்லும் ! ஒரு சொல் கொல்லும்! இவரின் தவறான வாக்குறுதி அனிதாவை கொன்று இருக்கிறது. மருந்துவ கல்வி தொடர்பாக அறிக்கைகள் தர யார் இவர்? இவர் என்ன மத்திய மருத்துவ துறை அமைச்சரா? இவர் நிச்சயம் ஸ்ரீரங்கந்து தேவதையும் இல்லை! தாடகை தாரகைகளின் எச்சமும் அல்ல! தமிழகம் முழுவதும் நடைபெறும் போராட்டக்கள் பற்றி சிறிதும் அச்சப்படாதவர் தான் இந்த சீதாராமன்.

webdunia

 
 
என் வருத்தம் எல்லாம்,  ஜல்லிக்கட்டுக்கு போராட்டம், ஹைட்ரொ கார்பன்  திட்டத்திற்கு எதிரான போராட்டம், நீட் தேர்விற்கு எதிரான போராட்டம் என தமிழன் வாழ்வும் போராட்டம் ஆகி  விட்டது. 
 
சங்கே முழங்கு! எங்கள் வாழ்வும், எங்கள் வளமும், என்றும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு ! சங்கே முழங்கு ! எங்கள் வாழ்வும், எங்கள் வளமும், என்றும் மங்காத சமூக நீதி  என்று சங்கே முழங்கு !
 
இன்று களத்தில் நிற்கும் அனைவரும் அனிதாக்களே! இது நீண்ட நெடிய போராட்டம். இந்த மாநில அரசு வெட்கி தலை குனிந்து இருக்கிறது. பள்ளிகள் தோறும், கல்லுரிகள், பல்கலைக்கழகங்கள், தோறும் அனிதாவுக்கான போராட்டத்தை எடுத்து செல்வோம்! மீண்டும் மீண்டும் சொல்கிறோம். மக்களை சந்திக்காமல் பாராளுமன்ற பின்புற வாசல் வழியாக வந்த சீதா ராமன்களை புறக்கணிப்போம்! இந்த போராட்டத்திற்கு புதிய விளக்கங்கள் தரும் ஹச்.ராஜா, எஸ்.வி. சேகர், கிருஷ்ண ஸ்வாமி, என அனைவரையும் எல்லா தளங்களிலும் வலிமையுடன்  எதிர்ப்போம் என்னும் ஒரு விதி செய்வோம் அதை அனிதாக்களுக்கு அர்ப்பணம் செய்வோம்.  
 
இரா காஜா பந்தா நவாஸ்

webdunia

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

‘பொம்பளை’ யார்?: கிருஷ்ணசாமிக்கு நெத்தியடி பதில் கூறிய பாலபாரதி!