Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

8ஆம் தேதி திருச்சியில் அனைத்து கட்சி கண்டன போராட்டம்: ஸ்டாலின் அறிவிப்பு

Advertiesment
8ஆம் தேதி திருச்சியில் அனைத்து கட்சி கண்டன போராட்டம்: ஸ்டாலின் அறிவிப்பு
, செவ்வாய், 5 செப்டம்பர் 2017 (07:48 IST)
நீட் தேர்வை எதிர்த்து நேற்று சென்னையில் அனைத்து கட்சி கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்பட பல கட்சியின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.



 
 
முதலில் அனிதாவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டவுடன் நீட் தேர்வு காரணமாக அனிதாவின் உயிர் பறிபோனது போன்று இன்னொரு உயிர் பலியாகிவிடக்கூடாது என்றும் தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய மாநில அரசுக்கு இந்த கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. 
 
கூட்டம் முடிந்ததும் செய்தியாளர்களிடம் பேசிய திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், 'நீட் தேர்விற்கு எதிராக வரும் 8ஆம் தேதி திருச்சியில் பிரம்மாண்ட கண்டன பொதுக்கூட்டம் நடத்த உள்ளதாகவும் இதில் இன்று பங்கேற்ற அனைத்து கட்சி தலைவர்களும் பங்கேற்பார்கள் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.. அதன் பிறகு எங்களது அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும் என்றும் அவர் மேலும் கூறினார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திமுகவுடன் இணையலாமா? வேண்டாமா? வைகோவின் குழப்பம்