Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

‘பொம்பளை’ யார்?: கிருஷ்ணசாமிக்கு நெத்தியடி பதில் கூறிய பாலபாரதி!

‘பொம்பளை’ யார்?: கிருஷ்ணசாமிக்கு நெத்தியடி பதில் கூறிய பாலபாரதி!

‘பொம்பளை’ யார்?: கிருஷ்ணசாமிக்கு நெத்தியடி பதில் கூறிய பாலபாரதி!
, செவ்வாய், 5 செப்டம்பர் 2017 (12:59 IST)
புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமிக்கும் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான பாலபாரதிக்கும் இடையே கடந்த இரண்டு தினங்களாக கருத்து மோதல் வலுத்து வருகிறது.


 
 
நீட் தேர்வில் தேர்ச்சி பெற முடியாத விரக்தியில் மாணவி அனிதா தற்கொலை செய்துகொண்டார். நீட் தேர்வு அவரது தற்கொலைக்கு காரணமில்லை. வேறு காரணங்களுக்காக அனிதா தற்கொலை செய்திருக்கலாம். இதுகுறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறியிருந்தார்.
 
இதனையடுத்து கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதி தனது சமூக வலைதள பக்கத்தில் கிருஷ்ணசாமி குறித்து பதிவு ஒன்றை செய்திருந்தார். அதில் கிருஷ்ணசாமி தனது மகள் மதிப்பெண் குறைவாக எடுத்திருந்ததால் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து புறவாசல் வழியாக மருத்துவப்படிப்புக்கான சீட்டை பெற்றதை அம்பலப்படுத்தினார்.
 
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த டாக்டர் கிருஷ்ணசாமி நான் பாலபாரதியை சட்டமன்றத்தில் பார்த்ததே இல்லை. மேலும் அந்த பொம்பளையை நான் பார்த்ததே இல்லை என தரக்குறைவாக பேசியிருந்தார் அவர்.

webdunia

 
 
இதற்கு கிருஷ்ணசாமிக்கு நெத்தியடி பதிலடி ஒன்றை பதவிவிட்டுள்ளார் பாலபாரதி. அதில், உன்னை பெற்றது யார்? உன் துணையாக வந்தது யார்? நீ பெற்றது யாரை? யாருக்காக ஷீட் கேட்டாய்? யாரிடம் கேட்டாய்? எல்லா கேள்விகளுக்கும் ஒரே பதில் டாக்டர்கிருஷ்ணசாமி "பொம்பளை! என கூறியுள்ளார் பாலபாரதி.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பெண்ணாக இருந்து ஆணாக மாறியவருடன் காதல் ; சென்னை காவல் நிலையத்தில் களோபரம்