Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

முருகரை காட்டி பெரியாரை கேவலப்படுத்துவதை பொறுத்துக் கொள்ள முடியாது! - ஓ.பன்னீர்செல்வம் ஆவேசம்!

Advertiesment
Muruga Bhakthar Manaadu

Prasanth K

, புதன், 25 ஜூன் 2025 (09:31 IST)

மதுரையில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டில் அண்ணா, பெரியார் குறித்து வெளியிடப்பட்ட வீடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதை கண்டித்து அதிமுகவினர் பேசி வரும் நிலையில், தற்போது ஓ.பன்னீர்செல்வமும் இந்து முன்னணியை கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

 

அதில் அவர் “பகுத்தறிவுச் சிந்தனைகளை பட்டிதொட்டியெங்கும் எடுத்துச் சென்று சமுதாயத்தில் மிகப் பெரிய சீர்திருத்தத்தை ஏற்படுத்தியவர் தந்தை பெரியார் அவர்கள். தந்தை பெரியாரின் கொள்கைகளை, திராவிட சித்தாந்தத்தை முன்னிறுத்தி, தேர்தலில் களம் கண்டு தமிழக அரசியலில் மிகப் பெரிய ஆட்சி மாற்றத்தை உருவாக்கிய பெருமைக்குரியவர் பேரறிஞர் அண்ணா அவர்கள்.
 

பேரறிஞர் அண்ணா அவர்களின் கொள்கைக்கு மாறான ஆட்சி தமிழ்நாட்டில் நடைபெற்றபோது அதனை எதிர்த்து, பேரறிஞர் அண்ணா அவர்களின் பெயரில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எனும் மாபெரும் மக்கள் இயக்கத்தைத் தொடங்கி, கட்சியின் கொடியில் அவரது உருவத்தைப் பொரித்து, தொடர்ந்து மூன்று முறை தமிழ்நாட்டில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியினை அமைத்தவர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள். புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களைத் தொடர்ந்து, போறிஞர் அண்ணா அவர்கள் காட்டிய வழியில் நான்கு முறை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியை அமைத்தவர் மாண்புமிகு இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், தமிழக மக்களால், மக்கள் சக்தியை தன்னகத்தே கொண்ட புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மற்றும் புரட்சித் தலைவி அம்மா ஆகியோரால் மதிக்கப்பட்ட, போற்றப்பட்ட தலைவர்கள் தந்தை பெரியார் மற்றும் பேரறிஞர் அண்ணா ஆகியோர். நாங்களும் அந்த வழியைப் பின்பற்றி கொண்டு வருபவர்கள்தான்.
 

தமிழக அரசியல் வரலாற்றில் மிகப் பெரிய புரட்சியை உருவாக்கிய தந்தை பெரியார் மற்றும் பேரறிஞர் அண்ணா ஆகிய இருபெரும் தலைவர்களை விமர்சித்து 'முருக பக்தர்கள் மாநாடு' என்ற போர்வையில் இந்து முன்னணி வீடியோ வெளியிட்டது கடும் கண்டனத்திற்குரியது” என்று தெரிவித்துள்ளார்.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கேர்ள் பிரண்டை நண்பர்களுக்கு விருந்தாக்க முயற்சித்த இளைஞர்.. இளம்பெண் செய்த புத்திசாலித்தனமான செயல்..!