நெல்லை மேயர் மீது கொண்டுவரப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது நாளை வாக்கெடுப்பு நடைபெறவுள்ள நிலையில் நம்பிக்கை இல்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பில் திமுக கவுன்சிலர்கள் பங்கேற்க மாட்டார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.
நெல்லை மேயர் மீது கொண்டுவரப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது நாளை வாக்கெடுப்பு நடைபெறவுள்ள நிலையில் மூன்று குழுக்களாக நெல்லை மாமன்ற உறுப்பினர்கள் வெளியூர் அழைத்து செல்லப்படுவதாக கூறப்படுகிறது
பாளையங்கோட்டை எம்எல்ஏ அப்துல் வகாப் தலைமையில் பெரும்பான்மையான கவுன்சிலர்கள் வெளியூர் அழைத்து செல்லப்படுவதாகவும், மாவட்ட செயலாளர் உள்ளிட்ட இரண்டு குழுக்களாக மற்ற கவுன்சிலர்களும் வெளியூர் பயணம் செய்யவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த வெளியூர் பயணத்தில் திமுக கவுன்சிலர்கள் மட்டுமின்றி கூட்டணி கட்சி கவுன்சிலர்கள் கலந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.