Publish Date: Wed, 03 Jan 2024 (13:26 IST)
Updated Date: Wed, 03 Jan 2024 (13:31 IST)
நெல்லை மாவட்ட மாநகராட்சியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற 24 மணி நேரம் கொடுக்கப்பட்டுள்ளது.
நெல்லை மாநகராட்சி ஆணையர் தாக்கரே சுபம் ஞானதேவ் இன்று அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
அதில், நெல்லை மாநகராட்சியில் போக்குவரத்திற்கு இடையூறான பாதையில் உள்ள ஆக்ரமிப்புகளை 24 மண் நேரத்திற்குள் அகற்ற வேண்டும்.
இங்குள்ள வியாபாரிகள் தாங்களாகவே முன்வந்து ஆக்ரமிப்புகளை அகற்ற வேண்டும்.
இதைத் தவறும் பட்சத்தில் மாநகராட்சி மூலம் அகற்றப்படுவதுடன் ஆக்கிரமிப்பு பொருட்கள் திரும்ப வழ
ங்கப்படாது என்று எச்சரித்துள்ளார்.