Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

லிப்டில் பெண்ணிடம் அத்துமீறல்..! ஆடிட்டர் அடித்துக் கொலை..!

Advertiesment
Murder

Senthil Velan

, வெள்ளி, 12 ஏப்ரல் 2024 (12:31 IST)
திருவள்ளூர் அருகே பெண்ணிடம் அத்துமீறிய புகாரில் காவல் நிலையத்தில் விசாரணைக்கு வந்த ஸ்ரீராம்  இன்சுரன்ஸ் நிறுவன  ஆடிட்டர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
 
திருவள்ளூர் அடுத்த அன்னதாசன் நகர் பெரியார் தெருவை சேர்ந்தவர் ராபர்ட்.  இவர் காக்களூர் பகுதியில் உள்ள  (ஸ்ரீராம்) தனியார் இன்சுரன்ஸ்  நிறுவனத்தில்  ஆடிட்டராக பணிபுரிந்து வந்தார்.
 
இந்நிலையில் அதே காம்ளக்சில் இந்தியா பில்டிங் ஹோம் லோன் என்ற தனியார் நிதி நிறுவனத்தில் லாவண்யா (26) என்ற பெண்  பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் செய்ய அவரது பெற்றோர் நடவடிக்கை எடுத்ததாக கூறப்படுகிறது. 
 
இந்நிலையில் பணி முடிந்து லிப்டில் வரும்போது  லாவண்யாவை ஆடிட்டர் ராபர்ட் வலுக்கட்டாயமாக கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்ததாக  கூறப்படுகிறது. இதுகுறித்து லாவண்யா திருவள்ளூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ராபர்ட்மீது புகார் அளித்ததையடுத்து விசாரணக்கு ஆஜரான நிலையில் மீண்டும் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இருந்து ராபர்ட் வந்தார். 
 
அப்போது அங்கு ராபர்ட்டை காவல் நிலைய வாசலில் வைத்து லாவண்யாவின் சகோதரர் மௌலி என்பவர் தலை கழுத்து ஆகிய இடங்களில்  3 முறை  பலமாக தாக்கியுள்ளார். ஏற்கனவே ராபர்ட்டுக்கு முதுகுத்தண்டில் பிரச்சனை ஏற்பட்டு ஆபரேஷன் செய்த நிலையில் லாவண்யாவின் தம்பி மௌலி தாக்கியதில் அனைத்து மகளிர் காவல் நிலைய வாசலிலேயே சுருண்டு விழுந்து ராபர்ட் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயரிழந்தார். இந்த சம்பவத்தை தொடர்ந்து லாவண்யாவின் தம்பி மௌலியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அதிகரிக்கும் கோடை வெயில்.. 24 கோடி குழந்தைகளுக்கு ஆபத்து! – இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு யுனிசெஃப் எச்சரிக்கை!