Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மதுரை அருகே கார் கவிழ்ந்து கோர விபத்து..! பலி எண்ணிக்கை 6-ஆக உயர்வு.. !!

Advertiesment
Car Accident

Senthil Velan

, புதன், 10 ஏப்ரல் 2024 (13:23 IST)
மதுரை அருகே நிகழ்ந்த கார் விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 6-ஆக உயர்ந்துள்ளது.

மதுரை வில்லாபுரம் பகுதியைச் சேர்ந்த கனகவேல் குடும்பத்தினர்,  தளவாய்புரம் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்துவிட்டு மதுரை நோக்கி காரில் வீடு திரும்பி கொண்டிருந்தனர்.
 
அப்போது, சிவரக்கோட்டை என்ற இடத்தில் சாலையின் குறுக்கே வந்த இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதியதில் கார் நிலை தடுமாறி சாலையில் உருண்டது. இதில் காரில் வந்த 10 வயது சிறுமி ஒரு பெண் உட்பட ஐந்து பேர் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். (சிவ ஆத்மிகா (10), கனகவேல் (61) கிருஷ்ணகுமாரி (58) பாண்டி (48) நாகஜோதி (45) ஆகியோர் பலி). உயிரிழந்த பாண்டி என்பவர் இருசக்கர வாகனத்தில் வந்தவர்.
 
மேலும் காரில் வந்த ரத்தினசாமி, மீனா, சிவஸ்ரீ ,காரை ஓட்டி வந்த மணிகண்டன் ஆகியோர் காயத்துடன் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் சிவஸ்ரீ என்ற (8) வயது சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதன் மூலம் இந்த விபத்தில் பலி் எண்ணிக்கை 6ஆக உயர்ந்துள்ளது.


பலியான உடல்கள் திருமங்கலம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. மதுரை மீனாட்சி பஜாரில் செல்போன் கடை வைத்திருக்கும் கனகவேல் குடும்பத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எந்த விசாரணைக்கும் தயார்..! எனக்கு எந்த தொடர்பும் இல்லை..!! இயக்குநர் அமீர்...