Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஏடி.எம்.ஐ உடைத்து 10 லட்சம் கொள்ளை.! மர்மநபர்களை பிடிக்க 5 தனிப்படைகள் அமைப்பு

ATM Theft

Senthil Velan

, சனி, 6 ஏப்ரல் 2024 (11:06 IST)
கிருஷ்ணகிரி அருகே எஸ்பிஐ, ஏடி.எம்.ஐ உடைத்து 10 லட்சம் ரூபாயை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
 
கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளியில் தேசிய நெடுஞ்சாலை ஓரம் எஸ்.பி.ஐ, ஏடிஎம் வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது. இந்த எஸ்பிஐ ஏடிஎம்மில் நேற்று மாலை வங்கி ஊழியர்கள் 16 லட்சம் ரூபாயை நிரப்பிவிட்டு சென்றுள்ளனர். 
 
இந்த நிலையில் இன்று காலை கட்டிடத்தின் உரிமையாளர் வெளியில் வந்து பார்க்கும் பொழுது ஏடிஎம் இயந்திரம் உடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதனை அடுத்து கட்டிட உரிமையாளர் குருபரப்பள்ளி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார்.
 
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த துணை காவல் கண்காணிப்பாளர் ஏடிஎம் உடைக்கப்பட்டது தொடர்பாக விசாரணை மேற்கொண்டார். அந்த விசாரணையில் மர்ம நபர்கள் ஏடிஎம்மில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் கருப்பு ஸ்பிரே அடித்து விட்டு ஏடிஎம் இயந்திரத்தை கேஸ் கட்டர் மூலமாக உடைத்து உள்ளே இருந்த சுமார் பத்து லட்சம் பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரியவந்துள்ளது. 
 
ஏடிஎம் மையத்திற்கு காவலாளிகள் யாரும் இல்லாத சூழலை சாதகமாக பயன்படுத்திய மர்ம கும்பல் இன்று அதிகாலையில் ஏடிஎம்ஐ கொள்ளையடித்து சென்றுள்ளது.

 
இந்த கொள்ளை கும்பல் தொடர்பாக விசாரணை நடத்தி கொள்ளையர்களை கைது செய்ய மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சங்கு தலைமையில் ஐந்து தனிப்படைகளை அமைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கராஜ் உத்தரவிட்டுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ராகுல்காந்தி பிரதமரானால் 24 மாதங்களில் மதுரை எய்ம்ஸ்: விருதுநகர் தொகுதி மாணிக்கம் தாகூர்